28 Dec 2018

செமட்ட செவன வீடமைபுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் 8 திட்டங்கள் இதுவரையில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

SHARE
செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களில் 8 திட்டங்கள் இதுவரையில் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த 50 நாட்கள் நாட்டில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட குழப்பகரமான சூழல் காரணமாக இத்திட்டங்கள் நிறுதி வைக்கப்பட்டிருந்தன. தற்போது இவ்வீட்டுத் திட்டத்தின் வேலைகள் அனைத்தும் துரிதப்பட்டுள்ளது. 
என தேசிய வீடமைப்பு  அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் க.ஜெகநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்டப்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் அமையப்பெறவுள்ள செமட்ட செவன வீட்டத்திட்டத்திற்கு அடிக்கல் நட்டு வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (28) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாவறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த முகாமையாளர் ஜெகநாதன்…..

இன்று வெள்ளிக்கழமை (28) மட்டக்களப்பு மாவட்டத்தில் ள செமட்ட செவன வீட்டுத்திட்டத்தின் கீழ் 7 திட்டங்களுக்கு அடிக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே பயனாளிகள் மிகவிரைவில் தற்களுக்குரிய வீடுகளை கட்டிமுடிக்க வேண்டும். இவ்வீட்டுத்திட்டத்தில் வீதி வசதிகள், நீர்வசதிகள், மின்சார வசதிகள், உள்ளிட்ட பல வசதிகளும், இதில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

இவ்வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்களின் வாழ்வாதாரமும் மேற்படுவதற்காக பயனாளிகள் வீட்டுத் தோட்டங்களை செய்ய வேண்டும். இந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேசம் விவசாயச் செய்கைக்குப் பெயர்போன பிரதேசமாகும், எனவே இத்திட்டத்தில் உள்ள அனைத்து பயனாளிகளும். தங்களது காணியில் வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வீட்டுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்படுகின்றபோது வீட்டுத்திட்டப் போட்டி ஒன்றும் நடாத்தப்பட்டு, அதில் முதலிடம் பெறும் குடும்பத்திற்கு 15000 ரூபாவும். இரண்டாம் இடம் குடும்பத்திற்கு 10000 ரூபாவும். மூன்றாம் இடம் குடும்பத்திற்கு 5000 ரூபாவும் அமைச்சரினால் பணப்பரிசும், சான்ழிதழும் வழங்கப்படவுள்ளன.  

அதேவேளை அரச வங்கிகளினூடாக மிகக்குறைந்த வட்டிவீத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலகு கடன்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. எனவே இவ்வீட்டுத்திட்டத்தில் வீடுகள் மாத்திரமல்லாமல் ஏனை பல நன்மைகளும், இதில் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு கிடைக்கவிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

















SHARE

Author: verified_user

0 Comments: