27 Dec 2018

கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்க 31 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இரவிலும், பலிலும், கட்டாக்காலியாக மாடுகள திரிவதனால் பிரயாணிகளும், பொதுமக்களும் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
பிரதான வீதிகளிலும், பொதுச்சந்தைப் பகுதிகளிலும், மற்றும் கிராமங்களிலுள்ள உள் வீதிகளிலும் மாடுகள் கட்டாக்காலியாகத் திரிகின்றன. இவற்றால் நாளாந்தம் பல விபத்துக்கள் இடம்பெறுகின்றன, போக்குவரத்துக்கள் செய்வதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமிலிருப்பது தமக்கு கவலையளிப்பதாக பொதுமக்களும் பிரயாணிகளும் அங்கலாய்க்கின்றனர். 

மண்முனை தென் எருவிப் பற்று பிரதேசத்தினுள் திரியும் கட்டாக்காலி மாடுகளை உரிமையாளர்கள் பிடித்து அவற்றை உரியமுறையில் கட்டி வளர்க்குமாறு நாம் ஏற்கனவே பொது அறிவித்த விடுத்துள்ளோம். என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதனிடம் வியாழக்கிழமை (27) தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

இவ்வாறான மாடுகளை நாம் பொலிசாரின் உதவியுடன் பிடித்து பின்னர் உரிமையாளர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடுவதற்கு எமது பிரதேச சபையும் களுவாஞ்சிகுடி பொலிசாரும் இணைந்து திட்டமிட்டுள்ளோம், எதிர்வரும் திங்கட் கிழைமைக்கு (31) முன்னர் எமது இந்நடவடிக்கையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம் என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: