23 Nov 2018

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் உளநலம் பற்றிய நட்புதவியாளர் செயலமர்வு

SHARE
(விஜி)

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான  சிறுவர் உளநலம் பற்றிய நட்புதவியாளர் செயலமர்வு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக மண்டபத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன் தலைமையில்  நடைபெற்றது.
சிடாஸ் ஸ்ரீ லங்கா - கனடா நிறுவனத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி ஆசியர்களுக்கான சிறுவர் உளநலம் பற்றிய  நட்புதவியாளர் பயிற்சி நடைபெற்றது. இச்செயலமர்வானது  48 மணித்தியாலங்கள் கொண்ட ஆறு நாள் செயலமர்வாக நடைபெற்றது. இச்செயலமர்வில் பிள்ளைகளை இனங்காணல்,  நன்னிலைப்படுத்தல், புறக்கிருத்தித்திய செயற்பாடுகள் சாந்தவழிப் பயிற்சிகள், சிறுவர் பாதுகாப்பு போன்ற விடயங்கள் ஆசிரியர்களுக்கு செயற்பாடுகள் ஊடாக தெளிவூட்டப்பட்டது.

இச்செயலமர்வில் வளவாளர்களாக முதன்மை உளவளத்துணையாளரும், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவிகல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜா, குழந்தை நல வைத்திய நிபுணர்  திருமதி.சித்திரா வாமதேவன், முதன்மை உளவளத்துணையாளர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

முன்பள்ளி சிறுவர் உளநல நட்புதவியாளர்களுக்காக ஆறு நாட்கள் நடாத்தப்பட்ட செயலமர்வின் நிறைவு நிகழ்வுகள் கடந்த புதன்கிழமையன்று  ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.சசிகரன், சிடாஸ் ஸ்ரீ லங்கா-கனடா நிறுவனத்தின்  செயளாலரும், ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளருமான எ.சுகுமாரன், வலயக்கல்வி அலுவலக (கணிதம்) உதவி கல்விப்பணிப்பாளர் ஜீ.சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்








SHARE

Author: verified_user

0 Comments: