26 Nov 2018

சகல சவால்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் பொருந்திய சிறுவர்கள் சிறந்த ஆளுமைகளோடு மிளிர்வார்கள். மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்

SHARE
சகல சவால்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் பொருந்திய சிறுவர்கள் சிறந்த ஆளுமைகளோடு மிளிர்வார்கள்.
மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்
சகல சவால்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் பொருந்திய சிறுவர்கள் சிறந்த ஆளுமைகளோடு மிளிர்வார்கள்.மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு லிற்றில் பட்ஸ் மொண்டசூரி முன்பள்ளியின் 8வது ஆண்டு நிறைவு விழாவும் சிறுவர்களின்  பரிசளிப்பு நிகழ்வும் அதன் இயக்குனர் எஸ். முகுந்தன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25.11.2018) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்,

விளையாட்டின் மூலம் உடல் வளம் பெறுகின்றது அதுபோல் கல்வியினால் உள்ளம் வலுப்பெறுகின்றது இரண்டினதும் சமாந்தர வளர்ச்சியினால் உடல் ஆரோக்கியமிக்க சிறுவர்கள் உருவாகின்றார்கள்.

அதனால் தான் பாலர் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும்போதே விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இத்தகைய சிறார்கள்தான் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக உயர் பதவிகளிலும், சமூகத்திலும் மற்றும்  அரசியலிலும் ஆட்சி செய்பவர்களாக உள்ளனர்.

தற்போதைய கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சிறார்களின் நுண்ணறிவு விருத்தி பெற்று வருகின்றது.

இதனால் அவர்களால் இலகுவில் எதனையும் அடையாளம் காணமுடிகின்றது. கல்விக்கான அத்திவாரத்தை இடும் பாலர் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை பாராட்டுதற்குரியது.

எமது நாட்டிற்கான  நற்பிரஜைகளை உருவாக்குவதில் அவர்களின் பங்கு அளப்பரியது ஏனெனில் கல்விக்காக சிறார்கள் பாடசாலையில் ஆசிரியைகளிடம் செலவு செய்யும் நேரத்தையும் பெற்றார்களிடம் கல்விக்காக செலவு செய்யும் நேரத்தையும் ஒப்பிடும்போது பாடசாலையில் உள்ள நேரமானது அதிகமானது.

எனவே பெற்றோர் ஆசிரியர்களிடத்தில் நன்றியுணர்வுமிக்கவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை, கலாசார மற்றும் விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றதோடு அவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

SHARE

Author: verified_user

0 Comments: