29 Nov 2018

காட்டு யானைத் தாக்குதலில் இருந்து அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெய்வாதீனமாகத் தப்பினார்.கிராமங்களுக்குள் புகுந்த யானைகளால் மக்கள் அல்லோலகல்லோலம்

SHARE
காட்டு யானைத் தாக்குதலில் இருந்து அரச உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெய்வாதீனமாகத் தப்பினார்.கிராமங்களுக்குள் புகுந்த யானைகளால் மக்கள் அல்லோலகல்லோலம்
மட்டக்களப்பு – படுவான்கரை திக்கோடையில் வியாழக்கிழமை 29.11.2018 காட்டு யானை ஒன்று வழிமறித்துத் தாக்கியதில் அவ்வூர்ப் பாடசாலையில் கடமை புரியும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் தெய்வாதீனமாக உயிராபத்தின்றித் தப்பிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் காட்டு யானையினால் நொருக்கப்பட்டுள்ளது.

பழுகாமத்திலிருந்து திக்கோடை கணேச வித்தியாலயத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது காட்டுக்குள் பதுங்கியிருந்த யானை அபிவிருத்தி உத்தியோகஸ்த்ததை வழிமறித்துத் தாக்கியுள்ளது.

அவ்வேளையில் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட உத்தியோகஸ்த்தர் காட்டு யானை தாக்க முற்படுகையில் தனது மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே கைவிட்டு விட்டு ஓடி உயிர் பிளைத்துள்ளார்.

அதனால் காட்டு யானை மோட்டார் சைக்கிளை இலக்காக்கிக் கொண்டு அதனைத் துவம்சம் செய்துள்ளது. 

இதேவேளை, தும்பங்சேகணி, திக்கோடை, இளைஞர் விவசாயத் திட்டம், களுமுந்தன்வெளி ஆகிய கிராமங்களில் சுமார் 13 காட்டு யானைகள் தினமும் மாலையாகியதும் உலாவி வருவதாக கிராமங்களின் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மக்கள் மாலையாகியதும் காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் அல்லோல கல்லோலப்படுவதாகவும் தூக்கமின்றி மரண பயத்தில் விழித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்தவிதமாக அட்டகாசம் புரியும் காட்டு யானைகளில் ஒரு  யானை வியாழக்கிழமை கிராமங்களிலிருந்து வெளியேறிச் செல்லும்போது வீடுகளைத் தகர்த்து விட்டும், விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவித்து விட்டும் சென்றதாக கிராமங்களிலுள்ள மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: