5 Nov 2018

மருதமுனையில் புற்றுறோய் அறிவூட்டல் நிகழ்ச்சி

SHARE
தொற்றா நோய்களுள் மிகவும் பாரதூரமான புற்றுநோய் (Cancerதொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும்  மாபெரும் புற்றுறோய் அறிவூட்டல் நிகழ்ச்சி நாளை செவ்வாய் கிழமை (06) மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஆரம்பமாகவுள்ளது. மருதமுனை  பீச் மஜ்லிஸ் ஒருங்கிணைப்பு செய்துள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமானது,
பெண்களுக்கு காலை 9.30 - 11.30 மணிவரைக்கும்   மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆப் பள்ளிவாசலிலும்   மாலை 3.30 - 5.30  வரைக்கும் மஸ்ஜிதுல் அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாசலிலும், ஆண்களுக்கு   மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசலில்
மாலை 7.30 - 9.30 மணிவரைக்கும் நடைபெறவுள்ளது.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி  டாக்டர் யு. இக்பால் MBBS,MD,RCP (UK)>  புற்றுநோய் விஷேட வைத்திய நிபுணர் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ளார்.

15 வயதிற்கு மேற்பட்ட  ஆண், பெண் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு அழைக்கப்பட்டுள்ளார்கள்.  

அண்மைக்காலமாக புற்றுநோய்(Cancer)     பலரின் உயிர்களை காவு கொண்டதுடன் மேலும் பலர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சர்வதேச புற்றுநோய் ஆய்வு நிலையத்தின் ஆய்வின்படி 2030 ஆம் ஆண்டளவில் வருடந்தோறும் 5.5 மில்லியன் பேர் புற்றுநோயால் இறப்பார்கள் எனவும்,இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதய எமது வாழ்க்கை முறை, எமது உணவுப் பழக்க வழக்கங்கள், சூழல் காரணிகள், உடலியற்காரணிகள் மற்றும் பரம்பரை காரணிகள் இந்நோய்க்கான காரணிகள் என இனங்காணப்பட்டுள்ளன. எமது நாட்டில் நுரையீரல் புற்றுநோய், மூளைப்புற்று நோய், மார்பகப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப்புற்றுநோய் என்பவற்றால் வருடந்தோறும் அதிக எண்ணிக்கையானோர் பாதிப்படைவதாக இலங்கை புற்றுநோய் பதிவகம் (Sri Lanka Cancer Registry)தெரிவிக்கின்றது.

புற்றுநோயைத் தடுப்பதற்கும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச நிறுவனங்களும், சுகாதார நிறுவனங்களும், வைத்தியசாலைகளும் பல முன்னெடுப்புக்களை செய்துவரும் நிலையில் மருதமுனையில் இந்த புற்றுநோய் அறிவூட்டல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

SHARE

Author: verified_user

0 Comments: