23 Nov 2018

மண்முனை மேற்கில் நடைபெற்ற பௌர்ணமி கலை விழா

SHARE
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நாடாத்திய
பௌர்ணமி கலை விழா  வியாழக்கிழமை (22.11.2018) இரவு வவுணதீவு பிரதேசத்தின் நாவற்காடு கிராமத்தில்  இடம்பெற்றது.

இந்த பௌர்ணமி கலை விழா கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜாவின் ஒழுங்கமைப்பில்,  மண்முனை மேற்கு பிரதேச கலாசார பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான எஸ். சுதாகர் தலைமையில்  நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் நடைபெற்று வந்த இக் கலைவிழா நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் நடைபெற வேண்டும் எனும் நோக்குடன் கடந்த சில மாதங்களாக மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடராக  நடைபெற்றுவருகின்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயளாளர் எம்.உதயகுமார், மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்செல்வன் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொல்லியல் ஆய்வாளர் கலாபூசணம் செல்வி கே.தங்கேஸ்வரி கலைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக  பிரதேச கலாசார பேரவையின் சார்பில் அரசாங்க அதிபரால் பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

இக் கலை விழா நிகழ்வில் பாரம்பரிய கலைகளாக கும்மி, வசந்தக் கரகம், பறை இசைத்தல், கிராமியப் பாடல், கவிதைகள், நாட்டுக் கூத்து உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. 













SHARE

Author: verified_user

0 Comments: