10 Nov 2018

பாராளுமன்றத் தேர்தல் ஜனவரி 5ஆம் திகதி

SHARE
பாராளுமன்றத் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடாத்துவதற்கான, அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல்யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2 உப உறுப்புரையின் கீழ் அதிமேதகு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக, பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிவிசேட வர்த்மானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதியன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல், 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாகவும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: