25 Oct 2018

காயத்திரி சித்தர் முருகேசு சுவாமியின 85 வது அவதார தினம்

SHARE
இப்பிரபஞ்சத்தில் தர்மம் குன்றி அதர்மம் ஓங்கும் போது, அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலை நாட்டவும், பக்தர்களை காக்கவும் யுகங்கள் தோறும் இப்பிரபஞ்சத்தில் நான் அவதாரம் செய்வேன் என ஸ்ரீ கிருஸ்ண பரமாத்மா பகவத்கீதையில் அருளியதற்கிணங்க அந்த மகா விஷ்ணு பகவானே இக் கலியுகத்தில் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமியாக அவதாரம் செய்தார்.
இதனையே மார்க்கண்டேய புராணத்தில் மார்க்கண்டேய மகரிஷி அவர்கள், “இக்கலியுகத்தில் காயத்திரி மந்திரத்தினை உலக மக்கள் அனைவருக்கும் மிக இலகுவில் புரியும்படியாக உபதேசித்து, பல காயத்திரி யாகங்கள் நிகழ்த்தி மக்கள் மாண்புற வழிகாட்டுபவரே பகவான் மஹா விஷ்ணுவின் கலியுக அவதாரம்” என அருளியுள்ளார்.

இவ் அவதார புருஷரின் 85 வது அவதார தினம்  2018.10.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பகவான் காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் முதல் மாணவனாகிய சித்தர் மகாயோகி ஸ்ரீ சற்குரு சி.புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில், சுவாமிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்பஞானபீடம், களுவாஞ்சிகுடி பழம்தோட்டம் ஸ்ரீ யோகஞானபீடம், மண்டூர் பாலமுனை ஸ்ரீ ஆத்மஞான பீடம், இந்தியா திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி ஆச்சிரமம் போன்ற பீடங்களிலும், மற்றும் இலங்கை கல்முனை, வம்மியடியூற்று, ஆனைகட்டியவெளி, துறைநீலாவணை, தாண்டியடி, கன்னன்குடா, திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள ஸ்ரீ பேரின்பஞானபீடத்தின் தியான நிலையங்களிலும் பக்தர்களால் சக்தி வாய்ந்த மகா மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டு மிகவும் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இவ் ஆன்மீகப் பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பகவான் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் அருளாசிகள், இறையின்பம் என்பனவற்றுடன் ஆன்ம ஈடேற்றத்தினையும் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

SHARE

Author: verified_user

0 Comments: