24 Jun 2018

முனைப்பினால் யுத்தத்தினால் காலை இழந்த முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி

SHARE
முனைப்பு நிறுவனத்தினால் யுத்தத்தின் போது ஒரு காலை இழந்த இரண்டு பிள்ளையின் தந்தையான முன்னாள் போராளிக்கு வாழ்வாதார உதவி சனிக்கிழமை (23) வழங்கி வழங்கிவைக்கப்பட்டது.
யுத்தத்தின் போது ஒரு காலை இழந்த நிலையில் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் மாவடியோடையில் வசித்துவரும்  முன்னாள் போராளி ஒருவர் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் வாழ்வாதாரத்துக்கு கஸ்ரப்படுவதுடன் தனது பிள்ளைகளின் கல்வியினை முன்னெடுப்பதிலும் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் இவரது மேற்படி பிரச்சினையினைக் கருத்தில் கொண்டு முனைப்பு நிறுவனத்தினால் வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கிவைக்கப்பட்டது.

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ.குகநாதன், ஆலோசகர் கே.புஸ்பராசா ஆகியோர் மாங்கேணி மாவடியோடைக்குச் சென்று இந்த உதவியினை வழங்கிவைத்துள்ளனர்.

இதேவேளை கிரான் பிரதேசத்தின் முறுத்தானை கிராமத்தில் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்த நிலையில் பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில் குறித்த பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுவருவதற்கான போக்குவரத்துச் செலவிற்கு பதினையாயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

அத்தடன் சித்தாண்டியைச் சேர்ந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமான நிலையில் அவரது பிரேதத்தை வீட்டுக்கு கொண்டுசெல்வதற்காக முனைப்பு நிறுவனத்தினால் பத்தாயிரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.




SHARE

Author: verified_user

0 Comments: