19 Jun 2018

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழு மீளமைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் சார்;ந்த சவால்களை தொடர்ச்சியாகக் கையாள்வதற்கு ஏற்ற வகையில் துறைசார்ந்தவர்களின் கரிசனை அரங்கம் மீளமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.
சிறுவர் நலன்சார்ந்த  செயற்பாட்டாளர்களை இணைத்து தொடர்ச்சியாக இயங்கச் செய்யும் நோக்கில் செயற்பாட்டு அரங்கத்தை மீளமைக்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை 12.06.2018 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கட்டிடத் தொகுதியிலுள்ள மாவட்ட சிறுவர் அபிவிருத்தி உப குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற சிறுவர் நலன்சார் துறைசார்ந்தோர் பங்கு பற்றிய இந்த கலந்துரையாடல் அரங்கத்தில் இலங்கைக் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன் (ளுநnழைச Pளலஉhயைவசளைவ ஊழளெரடவயவெ)   மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பொலிஸ் பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியொகத்தர்கள், உளநல உதவியாளர்கள், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர் நலன்சார்ந்த செயற்பாட்டு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் விவகாரங்களைக் கிரமமான முறையில் தொடர்ச்சியாகக் கையாள்வதற்கு ஏற்ற வகையில் சிறுவர் சவால்களுக்கு ஆதரவளித்தல், பாடசாலை இடைவிலகலைத் தவிர்க்கும் வகையில் நடைமுறைச் சாத்தியமான பொறிமுறைச் செயற்பாடுகளை வடிவமைத்தல், சிறுவர் சவால்களைக் கையாள்வதில் சட்ட நடவடிக்கை எடுப்பதில் வைத்தியத்தியப் பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவுகளிலிருந்து  பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுதல், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மட்டத்தில் சிறுவர் விவகாரங்கள் சம்பந்தமாக ஆராயும் வகையில் கிரமமான கூட்டங்களை நடாத்துதல் போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன் பெறுவதனால் உண்டாகும் பின் விளைவுகளால் குடும்பத்திலுள்ள சிறுவர்களும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள் என்பதையும் எந்த வழியிலாவது நுண்கடன் விடயத்திற்கு ஒரு பொறிமுறை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஏகோபித்த கருத்தில்  பிரஸ்தாபித்திருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: