28 May 2018

ஊருக்குள் நுழைந்த விரிபுடையன் பாம்பால் களேபரம்

SHARE
ஏறாவூர் நகர பிரதேசத்தின், பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள  வடி கானுக்குள் சனிக்கிழமை 26.05.2018 பெரிய அளவிலான பாம்புகள் நுழைந்துள்ளதாகப் பரவிய தகவலை அடுத்து அந்தப் பகுதியில் மக்கள் நடுங்கத் தொடங்கினர்.
பின்னர் இப்பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் நகர சபையின்  உப தலைவர் எம்.எல். றெபுபாசம் ஸ்தலத்திற்கு விரைந்து பிரதேச பொதுமக்களுடன் குறிப்பிட்ட வடிகான் பகுதிக்குள் பாம்புகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்தப் பகுதி வடிகானுக்குள் இருந்து பெரிய அளவிலான விரிபுடையன் பாம்பொம்பொன்று மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்புக் கருதி அந்தப் பாம்மை பிரதேசத்தவர்கள் கொன்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் அந்தப் பகுதியில் பாம்புகள் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்ட ஊகங்களின் அடிப்படையில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகின்றது.

விரிபுடையன் பாம்புகள் உஷ்ணம் நிநை;த கதகதப்பான சூழ்நிலையில்தமது வசிப்பிடத்தை அமைத்தக் கொண்டு உணவு தேடிச் சென்று வாழ்பவை என்று விலங்கியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.



SHARE

Author: verified_user

0 Comments: