இலங்கையில் பெரும்பான்மையினர் எதனைச் சொல்கின்றார்களோ அதனை வைத்திக் கொண்டுதான் விசாரணைகளை மேற்கொள்வோம் என அண்மையில் ஜனாதிபதி வெளிநாடொன்றில் வைத்து தெரிவித்திருந்தார்.
இலங்கையில் பெரும்பான்மையினமாகவுள்ளோர் யார் என அனைவருக்கும் தெரிவிதவிடையம். எனவே கடந்த கால யுத்ததினால்பாதிக்கப்பட்ட் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களை உள்வாங்கி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதையே நாம் இங்கு முன்வைக்கின்றோம் என, மட்டக்களப்பு சிவில் சமூக பிரதிதிநி வ.லவன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வதறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
சர்வதேச சவிசாரணை வேண்டாம் உள்ளக பொறிமுறை ஒன்றை உருவாக்கவுள்ளோம் என அரசாங்கம் கடந்த காலத்தில், திருகோணமலையில் செயலமர்வொன்று நடைபெற்றது. அச்செயலமர்வு அரச அதிகாரிகளுக்கும் தெரியாமல் மறைமுகமாக நடைபெற்றிருந்தது. இச்செயற்பாடு திருப்பியில்லை என மன்னார் மாவட்ட ஆயர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தும், ஆர்ப்பாட்டங்கள் செய்திருந்ததன் காரணத்தினால் அது நிறுத்தப்பட்டது.
பின்னர் 2016 ஆம் ஆண்டு தைப்பொங்கல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதமர் கருத்துத் தெரிவிக்கும்போது காணாமல் போனவர்கள் அனைவருக்கும் இறந்து விட்டதாக அறிவித்திருந்தார். அக்காலத்தில் எமது அரசியல் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் எதுவித எதிர்ப்புக்களும் தெரிவிக்காமலிருந்ததன் காணரத்தினால் கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டிருந்தார் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கவுள்ளதாகக் தெரிவித்துள்ளார். தற்போது மாணச் சான்றிதழ் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன இன்னும் சில காலங்களில் காணாமல் போனவர்களுக்குரிய மாணச்சான்றிதழ்கள் அனைத்தும் வழங்ஙப்பட்டு முடிந்துவிடும். நிலமை அவ்வாறுதான் சென்று கொண்டிருக்கின்றன.
ஆனாலும் எமது அரசியல் தலைவர்களோ சிவில் அமைப்புக்களோ இவ்விடையம் தொடர்பில் எதுவித எதிர்ப்புக்களையும் காட்டுவதாகத் தெரியவில்லை. எனவே காணாமாலாக்கப் பட்டவர்களு;குகாக வேண்டிய நீதியான தீர்வு கிடைப்பதற்கு சிவில் அமைப்புக்களும் எமது அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் பெரும்பான்மையினர் எதனைச் சொல்கின்றார்களோ அதனை வைத்திக் கொண்டுதான் விசாரணைகளை மேற்கொள்வோம் என அண்மையில் ஜனாதிபதி வெளிநாடொன்றில் வைத்து தெரிவித்திருந்தார். இலங்கையில் பெரும்பான்மையினமாகவுள்ளோர் யார் என அனைவருக்கும் தெரிவிதவிடையம். எனவே கடந்த கால யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களின் பெரும்பான்மை யானவர்களின் கருத்துக்களை உள்வாங்கி சர்வதேச விசாரணை வேண்டும் என்பதையே நாம் இங்கு முன்வைக்கின்றோம் என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment