முகாமைத்துவம் என்று சொல்லுகின்ற போது இருக்கின்ற வளத்தை
உச்சமாக பயன்படுத்தி உயரிய விளைவினை பெறக்கூடிய விதத்தில் செயற்பாடுகளைசிறந்த
உபாயங்கள் உத்திகள் மூலமாக கொண்டு செல்கின்ற ஒரு முறைமையாகும்எனக் குறிப்பிட்டார்.
அந்த வகையில், இலங்கையில் முகாமைத்துவமானது, குறிப்பாக நிதி முகாமைதுவமானது
இருக்கின்ற வளத்தினை உச்சமாக பயன்படுத்துகின்ற தன்மையினை கொண்டு இருக்கின்றதா?
உயர் விளைதிறனை அடையக்கூடிய விதத்தில்
செயல்படுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது, அதற்கான பதில் இல்லை என்பதாக
அமைகின்றது. முகாமைத்துவம் ஒன்றில் வினைத்திறன், விளைதிறன் அதிகரிக்கப்படுதோடு விரயம் குறைக்கப்பட
வேண்டும். அவ்வாறு இருந்தால் முகாமைத்துவம் சிறந்து விளங்கும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் செவ்வாய்க்கிழமை (09) நாடாளுமன்றில் நிதி
முகாமைத்துவம் பற்றி உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அர் மேலும் குறிப்பிடுகையில்……
நிதி முகாமைத்துவத்தை எடுத்துக்கொண்டால், அதில் நிதியானது
விரயம் செய்யப்படாமல் நிதி ஒழுக்கத்திற்கு உட்பட்டு பயன்படுத்தப்படவேண்டும்.இங்கு
நிதியானது ஊழல், மோசடிகள் கையடல்களுக்கு உட்படுத்தக் கூடாது.
அண்மையில் நிதி அமைச்சின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்
போது ஜனாதிபதி பின்வரும் விடயங்களை குறிப்பிட்டார். நிதி ஒழுக்கம்,, நிதி
முகாமைத்துவம் என்பவற்றை ஒரு வருட காலத்தில் பொறுப்புடன் நிறைவேற்றியுள்ளதாக
குறிப்பிட்டார். ஜனாதிபதி அலுவலக செலவுகள் 60 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுப் பயணங்களுக்காக தனிப்பட்ட
விமானங்களை பயன்படுத்துவதில்லை என்றும் சாதாரண விமானத்தில் வரையறுக்கப்பட்ட
குழுவினருடன் பயணிகளோடு பயணிப்பதாக கூறியிருந்தார். இவை ஜனாதிபதியின் நிதி
கையாளுகையை சரியாக வெளிப்படுத்துகின்றது. ஆனால், கடந்த கால ஆட்சியின் போது முன்னைய
ஜனாதிபதி வெளிநாட்டுப்பயணங்களுக்குதனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தி உள்ளமையையும்,
அதிகமான ஆட்களுடன் சென்றதையும், விமானம் பல நாட்கள் அயல்நாட்டுவிமானத்தளத்தில்தரித்து
நின்றதனையும் அறிய முடிகின்றது. இதனால் நிதி
முகாமைத்துவம் மீறப்பட்டுள்ளது என்பதனை காணமுடிகின்றது. இதனாலும், இலங்கையின்
விமான சேவை பாரிய நஸ்டத்தைக்கண்டது.
நிதி ஒழுக்கத்தில் அரசியல் வாதிகள், அரசியல் நிர்வாகிகள் கவனமாக செயற்படவேண்டும் என இன்றைய ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டின் அரச பணியாளர்களின் வினைத்திறன்30 வீதமாக உள்ளது, ஆயின் அரச
பணியின் வினைத்திறன்70 வீதத்தால்
குறைந்து காணப்படுகிறது. என்பதை பிரதம
மந்திரி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வாழைச்சேனை காகிதஆலையின் முகாமைத்துவம்பற்றியும்
அதன் தற்போதைய நிலை பற்றியும்ஆராய்யவேண்டியுள்ளது. இந்த ஆலை1956 இல்
ஆரம்பிக்கபட்டது.ஐ.தே.கஆட்சிக் காலத்தில் கிழக்கு
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் அபிவிருத்தி முன்னோடியுமான அமரர் நல்லையா
அவர்களின் பாரிய முயற்சியினாலும், முன்னாள் கைத்தொழில் அமைச்சர் G.G பொன்னம்பலம் அவர்களின் ஒத்துழைப்பினாலும் நிறுவப்பட்டது.இந்த ஆலையில் 4000ற்கும் அதிகமான தொழிலளர்கள்
நேரடியாகவும், தொடர்பு பட்டும் பணியாற்றி இருந்தனர். இதனால் 12000ற்குமேற்பட்ட
மக்கள் சம்பள வருவாயினை அனுபவித்தனர்.
உள்நாட்டுயுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட 1996,
1997 களில் சிறந்தஉற்பத்திக்கான தேசிய விருதுகளை இந்த ஆலை
பெற்றமை குறிப்பிடதக்கதாகும். ஆனால், கடந்த கால அரசாங்கங்களில் காணப்பட்ட தவறான
நடைமுறை காரணமாக காகித ஆலையிலும் தப்பான நிர்வாக நிதி முகாமை நடைபெற்றன. மேலும்
பழையமையான இயந்திர சாதனங்கள் இங்கு காணப்பட்டது. இவ் ஆலை புதுப்பிக்கப்படவில்லை.இவ்வாறான
போக்குகளால் ஆலையின் செயற்பாடு சரிந்து சென்றது. இதற்கு பொறுப்பான அமைச்சுகள்
முறையாக செயற்படவில்லை. தற்போது வெறும்129 தொழிலாளர்களை கொண்டு முடக்கப்பட்டுள்ளது. மரணப்படுக்கையை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
தற்போதையநல்லாட்சி அரசின் கீழ் காகித ஆலைக்கு மரண சான்றுதல் கொடுக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
உயிரோட்டமாக இயங்கிய ஆலை தேசிய உற்பத்தியைத் தந்த ஆலை சாகடிக்கப்படுவதற்கு
நல்லாட்சி பதில் கூற வேண்டும். குறிப்பாக தற்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர்
இதற்கான பதிலினை வழங்க வேண்டும். இந்த ஆலையில் உள்ள சகல பணியாளருக்கும் VRS மூலமாக ஓய்வு பெற்றுச் செல்வதற்கு வலயுருத்தப்படுகின்றது இதனை CRS{compulsory retirement system} என்றுதான் கூற வேண்டியுள்ளது. விரும்புகின்றவர்களை VRS மூலமாக அமைச்சர் அனுப்பினால் தவறுஇல்லை. ஆனால் கட்டாயப்படுத்தி ஓய்வுக்கு
அனுப்புவது என்பது அவர்களது தொழில்உரிமையை பறிக்கின்ற செயலாக அமைந்து விடும்.
அதுவும்நல்லாட்சி முறை காலத்தில் இது நடக்கக்கூடாது.
இங்கு 50 வயதிற்கு குறைந்த28 பணியாட்களும் 50-55 வயதிற்கு உட்பட்ட40 பணியாட்களும் 55 வயதிக்கு மேற்பட்ட 61 பணியாட்களும்
உள்ளனர். ஆயின் 55 ற்கு
குறைந்தவர்கள் கூட பணியைமுடிவுறுத்தி வீசப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
காகித ஆலையில் உள்ள துறைசார் அலுவலகர்கள், அத்தியாவசிய சேவை வழங்குனர்கள்,
அனுபவசாலிகள் பலவந்தமாக அகற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழர், முஸ்லிம்,சிங்களவர்,
பறங்கியரின் உழைப்புச்சாலையாக மட்டுமில்லாது உறவுச் சாலையாகவும் இந்தஆலை
இயங்கியது. இந்த ஆலையானது 320 ஏக்கர்
விஸ்திரத்தினை கொண்டது. நீண்ட கால எதிர்கால தேவையினை அடிப்படையாக கொண்டு இந்த
பரப்பளவுவழங்ககப்பட்டு இருந்தது. இந்த நிலமானது எந்த வகையிலும் தொழிற்சாலைதவிர்ந்த
பிற தேவைகளுக்காக கபளிகரம் செய்யக்கூடாது. திரைமறைவில் காகித ஆலைக்கான காணியினை குறுகிய தேவைகளுக்காக கையாடல் செய்தல் என்பதை ஆலையின் மீது அக்கறை கொண்ட எவரும் அனுமதிக்க
மாட்டார்கள். மட்டக்களப்பைப் பொறுத்த மட்டில் தமிழர்களுக்கும், முஸ்லிம்கலுக்கும்,
சிங்களவர்க்கும், பறங்கியர்களுக்கும் உரிய பொதுச் சொத்தாகஇந்த ஆலை அமையுமேயொழிய
எந்த ஒரு சமூகத்திற்குமுரிய இந்த ஆலையாகவா நிலமாகவோ அமையாது. இதனை மறுத்து எவராவது
செயற்பட்டால் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்றவரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதுஉரையாற்றிய
நிதி அமைச்சர் ரவி கருணாக அவர்கள் இந்த ஆலையினையும், மண்டூர் ஓட்டு
தொழிற்சாலையினையும் மீண்டும் வடிவமைத்து இயங்க செய்யவுள்ளதாக உத்தரவாதம் அளித்து
இருந்தார். இவ்விடயம்
ஹன்சட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியை நாட்டு மக்கள் அனைவரும்
அறிவர் வாக்குறுதி போக்குக்காட்டும் உறுதியாக அமைந்து விட கூடாது.
இனியும் ஏமாறுவதும் ஏமாற்றுவதும் இருக்க கூடாது. குறிப்பாக
வர்த்தக கைத்தொழில்அமைச்சர் காகித ஆலை விடயத்தில் நிதானமாகவும், நியாயமாகவும், சாந்தமாகவும், முற்போக்காகவும்செயற்பட
வேண்டும். என எதிர் பார்க்கின்றோம், நல்லாட்சியில் கௌரவ அமைச்சர் றிஸாத் பதியுதீன்காலத்தில் இந்த ஆலைக்கு மரண
சாசனம் எழுதப்பட்டதாக வரலாறு கூறக்கூடாது. அதனை அவர் செய்யமாட்டார் என நம்புகின்றோம். ஆக்கத்திற்கு வழிவகுப்போம்,
அழிவுகளுக்கு இடமளியோம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment