30 Aug 2016

எமது மக்களின் பிரச்சனைகளைத தீர்த்து வைக்கக்கூடாது என்ற நோக்குடன் ஒரு சிறிய குழுவொன்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது - நடராசா

SHARE
எமது மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக்கூடாது என்ற நோக்குடன் ஒரு சிறிய குழுவொன்று பல முயற்சிகளை
மேற்கொண்டு வருகின்றது. எத்தனையோ எமது உறவுகள் காணாமல் போயும், காணாமலாக்கப்பட்டும் பல வருடங்கள் கழிந்த பின்னர் தந்போது நாடாளுமன்றத்தில் அதற்கான ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காணாமலாக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது போன்ற விடையங்கள் தொடர்பில் இச்சட்டத்தின் மூலம் அனுகூலமாக அமையும் என எதிர் பார்க்கின்றோம். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் யுத் கோ ரலன் எனும்  தொணிப் பொருளின் கீழ் அமுல்ப்படுத்தப்படும் பிரஜைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பொரியபோரதிவு பாரதி முன்பள்ளி பாடசாலைக்குரிய சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28) பெரியபோரதீவு பாரதி இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.டினேஸின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருனாகரம் (ஜனா) மா.நடராசா, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ், ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஜெயறிசில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இவ்வேலைத்திட்டத்திற்காக தேசிய இளைஞர் சேவை மன்றம் 75000 ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட இளைஞர் கழகம் தனவந்தர்கள், நன்கொடையாளர்கள், போன்ற பலரிமும் உதவிகளைப் பெற்று இவ்வேலைத் திட்டத்தினை பூர்தி செய்ய வேண்டியுள்ளது.

இதன்போது மேற்படி பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பினால் புத்தகப் பைகளும் வழங்கப்பட்டன.

இதன்போது நடராசா மேலும் தெரிவிக்கையில்… கடந்த கால எமது இளைருர்கள் இரத்தம் சிந்தியதன் காரணமாகத்தான் தற்போது எமது பிரச்சனை சர்வதேச மயப்பத்தப்பட்டுள்ளது. அன்றய காலகம்மாடாழல் எமது இளையுர் கள் செய்த தீயாகங்களால் தற்பொது எமக்கு சர்வதேச ரீதியில் அங்கீகராரத்தைப் பெறுமு; அளவிற்குச் சென்றுள்ளது. சமூகத்தின் முதுகெலும்பாகவுள்ள இளைஞர்களால் பல மாற்றங்கள் வருகின்ற. இவ்வாறான இளைஞர்களுக்கு நாம் என்றென்றும் உந்து சக்தியளிப்போம்.

கடந்த காலத்தில் எமது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப் பட்டிருக்கின்றார்கள், தற்போதுவரைக்கும்  பல இளைஞர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற நிலையிலும் மீதமாய்யுள்ளவர்கள் கிராமங்களை வழிநடாத்திக் கொண்டிருக்கின்றாரகள்.

இளைஞர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு கடந்த மஹிந்தராஜபக்ஸவின் ஆட்சி இருந்தது என்பதையும் மறந்துவிட முடியாது. அந்த ஆட்சியைக்கூட நாற்காலியில் உட்கார வைத்த பங்கு எமது இளைஞர்களுக்கும் உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்கள் வெளியில் நடமாட முடியாது. தற்போது அதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  எமது மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக்கூடாது என்ற நோக்குடன் ஒரு சிறிய குழுவொன்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எத்தனையோ எமது உறவுகள் காணாமல் போயும், காணாமலாக்கப்பட்டும் பல வருடங்கள் கழிந்த பின்னர் தந்போது நாடாளுமன்றத்தில் அதற்கான ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. காணாமலாக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது போன்ற விடையங்கள் தொடர்பில் இச்சட்டத்தின் மூலம் அனுகூலமாக அமையும் என எதிர் பார்க்கின்றோம்.

இச்சட்டம் கொண்டு வந்ததைக்கூட தனக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என நினைத்துக் கொண்டு அதனை அமுல்ப்படுத்த விடக்கூடாது என சிங்கள மக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி பிரச்சாரம் செய்து வருகின்றார். காணாமல் போனது உண்மை, அவர்களைக் கடத்திக் கொண்டு போனது உண்மை அவற்றை அறிய வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது. இந்த செயற்பாட்டை எதிர்ப்பவர்கள் யாரோ அவர்களேதான் இதனைச் செய்திருக்க வேண்டும்.  உண்மைகள் வெளிவந்தால் அவர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்பதற்காகத்தான் இதனை எதிர்க்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி பரிசுத்தமானவராக இருந்தால் காணாமல் போனவர்கள் தொடர்பில் கொண்டுவந்துள்ள சட்டத்தை ஏன் அவர் தடுப்பதற்கு முற்படுகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: