இன்னுமின்னும் இனத்துவேசங்களை விதைத்த வண்ணம், பெரும்பான்மை மக்களை, சிறுபான்மை மக்களுக்கு எதிராக சீண்டுகின்ற செயற்பாடுகளித்தான் சில அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மக்களினால் நிராகரிக்கப்பட்ட
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஸவின் தலைமையில் கண்டியிலிருந்து பாத யாத்திரை சென்று நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு திட்டம் போட்டு செயற்பட்டிருந்தர்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறை – கற்சேனை பிரதான வீதி கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 6859790 ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண வேலைகள் சனிக்கிழமை (06) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்…
மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஆர்ப்பாட்டங்கள் செய்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று சொன்னால் அது ஒரு பகல் கனவாகும். எனவே மீண்டும் இந்த நாட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகல் கனவு காணுகின்றார். மாறாக மக்கள் ஆணை வழங்கினால்தான் ஆட்சியமைக்கவோ, அதிகாரங்களைப் பெறவோ முடியும் என்பதை முன்னாள் ஜனாதிபதி மறந்துவிட்டார் போலும்.
எமது கிழக்கு மாகாணசபையில் தற்போது வீதி அபிவிருத்தி அமைச்சராக இருக்கின்ற ஆரியவரி கலப்பதி அவர்கள் முன்னாள் ஜனாதிபதியின் கட்சியில்தான் இருந்தவர் ஆனால் மைத்திரிபாலசிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர் நல்லாட்சி உருவாக்கப்பட்டு அந்த நல்லாட்சியில் ஒரு பங்காளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடுதான் தற்போது அவர் மாகாண சபையில் அவர் அமைச்சராக இருக்கின்றார்;. கிழக்கு மாகாண சபையில் சிங்கள அமைச்சராக அவர் இருந்தலும் அவர் இனத் துவேசங்களைக் காட்டாமல் அனைவருடனும் சகோதரசெயற்பட்டு வருகின்hறர்.
இவ்வாறு ஜதார்த்தத்தைப் புரிந்து நடக்கின்ற அரசியல்வாதிகள், இந்நாட்டு அரசியலுக்குத்தேவை, இவ்வாறான செயற்பாடுகளுடாகத்தான் நீதி, நியாயமான தேவைகளை நிறைவேற்றலாம். பெரும்பான்மை மக்களின் மனங்களில் புரிதலை ஏற்படுத்தலாம், என்பதோடு இவ்வாறு உண்மையை உணர்ந்த அரசியல்வாதிகள் எம்மோடிருந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment