14 Aug 2016

பயனாளிகள் அரச பயங்கரவாதத்துடன் தொடர்பு அற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்தம் நடவடிக்கை தேவையற்றது.

SHARE
அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கள் மத்தியில் உடமைகள் பாதிக்கப்பட்வர்களுக்கு, யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள், போன்ற பலருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றளன ஆனால் உதவிகள் வழங்கப்டும்போது
குறித்த மக்கள் அல்லது பயனாளிகள் அரச பயங்கரவாதத்துடன் தொடர்பு அற்றவர்கள் என்பதை உறுத்திப்படுத்திக் கொடுக்கவும் என மேலும் ஒரு விண்ணப்பப் படிவம் அனுப்பப் படுகின்றது. இது ஒரு தேவையற்றவிடையமாக நாம் கருதுகின்றோம்.

என ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்க சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ்.ஞானசிறி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்ப்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…. 


பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸ் அறிக்கைகள் உள்ளன, இறப்பு என்றால் மரணச்சான்றிதழ் உள்ளது. இவ்வாறு இருந்தும் மக்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கும்போது குறித்த பயனாளி அரச விரோதச் செயலில் ஈடுபடவில்லை என்ற சுழுக்கு ஒன்றை அரசு வைத்துள்ளது. இது வேண்டத்தகாத விடையமாகும்.  இதனை அரசாங்கம் நீக்கவேண்டும் என்பதை அரச உத்தியோகஸ்த்தராகிய நாங்கள் ஆலோசனையாக முன்வைக்கின்றோம். 

பாதிக்கப்பம்டவர்களுக்கு உதவி வேண்டும் என முழுமனதோடு ஏற்றுக் கொண்டால் உரிய ஆவணங்களைப் பெற்றுவிட்டு வழங்க  வேண்டியதுதான். மேலும் கிராம உத்தியோகஸ்தர்கள் பயனாளிகள் பற்றி மேலும் ஒரு அறிக்ககை கொடுக்க வேண்டியது தேவையற்ற விடையமாகும்.

இது ஒருபுறமிருக்க முன்னாள் போராளிகள் தற்போது இறக்கின்றார்கள் என்ற செய்தி வந்த வண்ணமிருக்கின்றன தெரிந்தோ தெரியாமலே யுத்தம் ஒன்று நடைபெற்று முடிந்துள்ளது. முன்னாள் போராளிகள் பலர் கால் ககை இழந்த நிலையிலும் தற்போது ஜனநாயகவழ்வில் இணைந்து பிள்ளைகுட்டிகளோடு வாழ்ந்து வரும்வேளையில் மீண்டும் அவர்கள் தொழில் தேடுவதற்கு அவர்களால் முடியாத காரியம், எனவே அரசாங்கம் இவ்வாறானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வளவு காலத்திற்கு அரசு இப்படிப்பட்டவர்களுக்கு எதுவித தெரில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்காததன் காரணத்தினால்தான் தற்கொலைகள் நடக்கின்றன. எனவே இவற்றையும் அரசு கவனத்தில் எடுக்கவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

SHARE

Author: verified_user

0 Comments: