மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப்படுகையிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மண் அகழ்ந்து சென்ற மூன்று சாரதிகள் கைது செய்யப்பட்டதோடு மண் நிரப்பிய உழவு இயந்திரங்கள் இழுவைப் பெட்டிகளுடன் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் வியாழக்கிழமை (ஓகஸ்ட் 18, 2016) இரவு இடம்பெற்றுள்ளது.
சந்தனமடு ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்ந்து செல்லப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து தாங்கள் சோதனையிலீடுபட்டபோது அனுமதிப்பத்திரமின்றி அகழ்ந்து ஏற்றிச் செல்லப்பட்ட மணலுடன் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment