வைத்தியசாலைக்கு போயிற்று வரும்போது போரதீவு எனுமிடத்தில் நின்ற விசேட அதிரடிப்படையினர் ஒரு புத்தகத்தை கொடுத்து இதனை எமது முகாமிற்குள் கொடுத்துவிடு என அனுப்பிவைத்து விட்டு அவர்களது முகாமிற்குள்ளே வைத்து எனது
கணவரைப் பிடித்து விட்டார்கள் எனது கணவர் பற்றிய தகவல்களையாவது அறிவதற்கு அன்றிலிருந்து இன்று வரை தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கின்றேன் என தெரிவிக்கின்றார் காணாமல் போனதாகக் கருதப்படும் தவராசாவின் மனைவியான பவானி.
கடந்த 2008.12.20 ஆம் திகதி விசேட அதிரடிப்படையிரால் பிடிக்கப்பட்ட எனது கணவரை மீட்டுத்தாருங்கள் என நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றபோது கலந்து கொண்டு தனது முறைப்பாட்டைத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
எனது கணவரை அவர் காணாமல் போன திகமான 2008.12.20 அன்றிலிருந்து பல அரச அமைப்புக்களிடமும் அரச சார்பற்ற அமைப்புக்களிடமும் முறைப்பாடு செய்துள்ளேன் ஆனால் இன்றுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை தற்போது நல்லிணக்கக் குழுவிடமும் எனது முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளேன் இந்த அமைப்பினூடாகவேனும் எமக்கு ஏதாவது சாதகமான முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.
எனது கணவர் காணாமலாக்கப் பட்டதிலிருந்து நான் மிகவும் கஸ்டநிலையில்தான் வாழ்ந்து வருகின்றேன் அரசாங்கம் எதுவித உதவிகளையும் ஏற்படுத்தித்தரவில்லை அரச சார்பற்ற அமைப்பொன்று 5 ஆடுகள் தந்தது, கடன் பெற்று மாடு வாங்கியுள்ளேன் இவற்றினூடாகக் கிடைக்கும் வருமானத்தில் எனது 2 பிள்ளைகளையும் படிப்பித்தும் சீவியமும், நடாத்தி வருகின்றேன். இவற்றை விட எனக்கு வேறு யாருமோ எதுவித உதவிகளையும் எனக்கு ஏற்படுத்தித்தரவில்லை. எனக்கு குடியிருக்கும் வீட்டு வசத்தியையாவது யாரும் ஏற்படுத்தித் தரவில்லை.
எனது 2 பிள்ளைகளுடன் நான் கஸ்ற்றப்பட்டு வாழ்ந்தாலும் பரவாயில்லை எனது கணவரை எங்கிருந்தாலும் கண்டு பிடித்துத்தாருங்கள் என்னைப்போலவே உறவகளைத் தொலைத்தவர்கள் எமது பகுதியில் அனேகம்பேர் உள்ளனர் அவர்களும் பல இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment