
புதிய காத்தான்குடி -06, கர்பலா வீதி நூராணியா பள்ளிவாயலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் எல்ப் வண்டியும் மோதிக்கொண்டதில் இந்த விபரீதம் இடம்பெற்றது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற முஹம்மது சலீம் (வயது-52) என்பவர் படுகாயங்களுக்குள்ளாகி உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் திங்கள் இரவு மரணமானார்.
இதேவேளை விபத்தை ஏற்படுத்திய எல்ப் வாகனத்தைச் செலுத்திச் சென்ற அதன்சாரதி தங்கவேல் பிரசாந்தன் (வயது 34) என்பரை காத்தான்குடிப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்ற அதேவேளை கைது செய்யப்பட்ட சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடிவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment