9 Aug 2016

கிழக்கு மாகாண பட்டதாரிகள் மீண்டும் 1134 பேருக்கு விரைவில் நியமனம் -முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்

SHARE
கடந்த சில மாதங்களாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் கிழக்கு மாகாணப் பட்டதாரிகளின் நியமன
ம் தொடர்பில் மீண்டும் 1134 பேருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம் வழங்க மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர்கள்  35 வயதுக்குட்பட்ட 355 பேருக்கு  விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுத பாணி ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரம சிங்க, ஆளுணர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன்  நடாத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் 1134 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க இந்த அனுமதி கிடைத்துள்ளன.

இதன் பிரகாரம் தமிழ் மொழியில் 823 பட்டதாரிகளும், சிங்கள மொழியில் 311 பட்டதாரிகளும் விரைவில் நியமிக்கப் படவுள்ளனர் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: