போருக்குப் பின்னரான காலப் பகுதியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் தற்கொலைகள் பற்றி கருத்துப் பகிர்ந்து கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கான
சந்திப்பொன்று வியாழக்கிழமை (ஜுலை 21, 2016) காலை 9.45 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக தகவல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.தேவஅதிரன் தெரிவித்தார்.
மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
குறிப்பாக இந்த சந்திப்பில் தற்கொலை நிகழ்வுகளின்போது ஊடக அறிக்கையிடல்கள் மேலும் தற்கொலைகளை ஊக்குவிக்காத வண்ணம் கவனமாகக் கையாளப்பட வேண்டியதன் அவசியம்பற்றி வலியுறுத்தும் சமூகப் பொறுப்பபுக்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் என தேவஅதிரன் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment