மகாண சபை, மத்திய அரசு ஆகிய இரண்டு விடயங்களுடாக ஒதுக்கப்படுகின்ற நிதி விடயங்களில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி தொடர்விலான மாற்றங்களை அல்லது அதன் பலாபலன்களை அடைந்துள்ளதா? என்பது தொர்பாக வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார.
இது சம்பந்தமாக இரண்டுவிதமான விடயங்களை கூறலாம் என்று நினைக்கின்றேன் நீங்கள் கூறியவாறு எதிர்க்கட்சி தலைவர் பதவியினை மத்திய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்டாலும் கூட தற்போது ஒருவகையான இணக்க அரசியலை செய்து வருகின்றது, அது போன்று அபிவிருத்தி என்று சொல்கின்றபோது கிழக்கு மாகாண சபையிலும் பங்கு இருக்கின்றது, என்பதனை புறந்தள்ளி கதைக்கமுடியாது சிறிலங்கா முஸ்லிம் காங்கரசுடன் இணைந்து ஆளுங்கட்சியாக இருக்கின்றது.
இது மத்திய அரசாக இருந்தாலும் சரி மாகாண சபையாக இருந்தாலும் சரி இந்த இரண்டு விடயங்க@டாக ஒதுக்கப்படுகின்ற நிதி விடயங்களில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அண்iமியல் உங்களுக்கத் தெரியும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ் வைத்தியசாலைகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது மற்றும் பாடசாலை சிற்றூளியர் நியமனத்திலும் இவ்வாறான நிலை தொடர்ச்சியாக காணப்படுகின்றது. மத்திய அரசினால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பொலனறுவையில் இருக்கக் கூடிய சிங்கள இனத்தவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை கூடிக்கொண்டு செல்வதனை அவதானிக்க முடிகின்றது. அது மாத்திமின்றி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் கூட தற்போது பல சிங்கள இளைஞர்கள் இணைக்கப்பட்டு சேவை செய்கின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்து இணக்கப்பாட்டு அரசியலனின் ஊடாக இவை இடம் பெற்று வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. என அவர் இதன் போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment