முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55 வது ஆண்டு நிறைவையொட்டி உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
மட்டக்களப்பு முதலைக்குடா விளையாட்டுக் கழகத்தின் 55 வது ஆண்டு நிறைவையொட்டி உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி சனி, ஞாயிறு (02,03) ஆகிய இரு தினங்களிலும் நடைபெற்றது.
இவ் விளையாட்டியில் 24 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்று இறுதிச் சுற்றுக்கு முதலைக்குடா விளையாட்டுக் கழகமும் அரசடித்தீவு விக்கேனஸ்வரா விளையாட்டுக் கழக அணியினரும் தெரிவாகியிருந்தது.
இதன்போது தண்டனை உதை மூலம் (பனால்ட்டி) அரசடித்தீவு விக்கேனஸ்வரா விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
இவுதைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிநிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (03) மாலை நடைபெற்றது இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் பாடசாலைகளின் அதிபர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment