8 Jun 2016

மீண்டும் தெருவுக்கு வந்துள்ளோம்

SHARE
நம்முடைய பிரச்சினைகளுக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் என்ன நடந்தது என்று கதைப்பதற்காக நாம் மீண்டும் தெருவுக்கு வந்து ஒன்றிணைந்து போராடப் புறப்பட்டுள்ளோம் என்று அனைத்து பல்கலைக்
கழக மாணவர் ஒன்றியம் விநியோகித்து வரும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரங்கள்; பொதுமக்களிடமும் பயணிகளிடமும் நாட்டின் பல பாகங்களில் பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அந்தப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரணில் விக்கிரமசிங்ஹ அதிகாரத்திற்கு வந்து மூன்று மாதங்களுக்குள் மாணவர் இயக்கங்கள் வீதிக்கு வர நேரிட்டது. எங்களுக்காக மட்டுமல்ல விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், மற்றும் சேவையாளர்களின் உரிமைகளைக் கேட்டே நாம் வீதிக்கு வந்தோம்.

இன்னமும் அரசாங்கப் பாடசாலைகளில் பணம் அறவிடுகின்றார்கள், பாடசாலைச் சீருடைக்குப் பதிலாக வவுச்சர் கொடுத்தார்கள், அரச பல்கலைக் கழகங்களில் இணைந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கு இடமளித்துள்ளார்கள், அரச வைத்தியசாலைகளில் சிறிது பணம் கொடுத்து மருந்து வாங்க வேண்டியுள்ளது, நெல்லுக்கான உத்தரவாத விலையை ஆகவும் அடிமட்டத்திற்குக் கொண்டுவந்த விட்டார்கள்.,

இவையெல்லாம் போதாக் குறைக்கு இப்போது நமது வாழ்க்கையைத் சுரண்டி உண்பதற்கு இந்திய அரசுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ளும் உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தயாராகின்றார்கள்.

துறைமுகத் திட்டத்தினை மீண்டும் அதிகார பூர்வமாக ஆரம்பிக்கப் போகின்றார்கள்.

வேலையில்லாப் பட்டதாரிகளின் நடைப் பயணத்தை பொலிஸாரைக் கொண்டு தாக்குதல் நடத்தி தடைப்படுத்தினர்.

மீதொட்டமுல்ல மக்கள் குப்பை கூழங்களோடு வாழ்வது போதாதென்று அரசிடம் அடிவாங்கி சிறையில் இருக்கவும் நேரிட்டது. பந்தகிரிய, தொட்டலங்க மக்களுக்கும் இதுவே நேரிட்டது.

மாலபே திருட்டுக்; கல்விப்பட்டக் கடையை தடை செய்யக்கோரி ஆறு மருத்துவ பீடங்களின் மாணவர்கள் தொடர்ச்சியான சத்தியாக் கிரகத்தினைத் தொடங்கியிருக்கின்றார்கள்.

ஐநுளுடு ஐஈஎஸ்எல், Nளுடீஆ என்எஸ்பிஎம் ஆகிய நிறுவனங்களில் கல்வியை விற்பதற்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

இருந்தும் இந்தப் போராட்டங்களில் ஒன்றையேனும் அரசு கணக்கிலெடுக்காதது போலவே தோன்றுகின்றது.

உரிமைகளைக் கேட்டு குரல் எழுப்பும்போது அதற்காகக் குரல் கொடுப்பவர்களை அடக்க வேண்டிய தேவையினால் அரசு இதனைச் செய்கின்றது.

இதுவரை இருந்த எல்லா ஆட்சியாளர்களுமே ஆட்சி அதிகாரத்திற்குள் வந்த பிறகு எமது மக்களின் பிரச்சினைகளை மறந்து விட்டவர்கள்தான்.

மஹிந்த சென்றார், ரணில் மைத்திரி கூட்டாக வந்தார்கள். ஆனால் யாருடைய பிரச்சினை தீர்ந்தது யாருக்கு ஜனநாயகம் கிடைத்தது ?
ஆட்சியார்கள் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் பட்சத்தில் கோபதாபங்களை மறந்து ஒன்றுபட்டுவிடுவார்கள்.

அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் ? மாணவர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், மற்றும் சேவையாளர்கள்; சமூகம் என்கின்ற ரீதியில் அணிதிரண்டு எமது உரிமைகளை வெற்றி கொள்ளப் போராடுவோம். என்பன உட்பட மேலும் பல விடயங்கள் அந்தப் பிரசரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.SHARE

Author: verified_user

0 Comments: