12 Jun 2016

ஆசிரியையால் தாக்கப்பட்ட 10 வயது மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள காத்தான்குடி நகரில் 10 வயது மாணவன் பிரத்தியேக வகுப்பு நடத்திய ஆசிரியையினால் தாக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் காத்தான்குடி-03, மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில்  தரம் ஐந்தில் கல்வி பயிலும் ஷாக்கிர் ரஹ்மான் எனும் மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இத்தாக்குதல் சம்பவம் சனிக்கிழமை காலை (ஜுன் 11, 2016) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: