4 May 2016

கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் உத்தரவை மீறிய பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்

SHARE
அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக கிழக்கு மாகாண பாடசாலைகளை 12 மணியுடன் மூடிவிடுமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்  உத்தரவு பிறப்பித்திருந்தார். இதற்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண சபை அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் 12 மணியுடன் மூடப்பட்டது.

இன்று புதன் கிழமை பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களுக்கு  வழமை போன்று பாடசாலைகள் யாவும் 1.30 மணிக்கே முடிவுறும் என அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கும் படி பணித்துள்ளார். இதன்படி அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டன.

ஆசிரியர்களுக்கு  இந் தகவலில் சந்தேகம் எழுந்த நிலையில் இதனை  உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு ஏனைய வலயங்களில் கடமையாற்றும் சக அசிரியர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, பட்டிருப்பு வலயத்தின் தன்னிச்சையான முடிவு தெரியவந்தது. இதன் பின்னர்  மாகாண சபை உறுப்பினர் ஊடாக கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வலயக்கல்விப் பணிப்பாளருடன் நேரடியாக தொடர்பு கொண்ட கல்வி அமைச்சர் 12 மணிக்கு பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மாகாண கல்வி அமைச்சரின் உத்தரவினை மீறுமளவிற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் நடந்து கொண்டமை அதாடர்பில் பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கியவர் யார்? என்பது தொடர்பில் ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: