15 May 2016

போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி

SHARE
(டிலா )

மருதமுனை பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் பூரண அனுசரணையில் 'போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் கிண்ணிய மத்திய கல்லூரி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் (13.05.2016) மாலை கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மிகச் சிறந்த 12 பாடசாலைகளின் 19 வயதுக்குட்பட்ட  உதைபந்தாட்ட அணிகள் இதில் பங்கு கொண்டன.

இலங்கை பாடசாலை உதைபந்த சம்மேளனம், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து கல்முனை பொலிஸ் நிலையம்

மிகவும் கோலாகலமாக  ஏற்பாடு செய்த இறுதிப் போட்டியில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியும் கிண்ணியா மத்தி கல்லூரியும் ஒன்றை ஒன்று எதிர்த்தாடியது. ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் அல்-மனார் மத்திய கல்லூரி ஒரு கோளினை புகுத்தியது. அதனை தொடர்ந்து கிண்ணியா மத்திய கல்லூரி அணி இரண்டாம், மூன்றாம், நான்காம் கோள்களை போட 3 - 1 என்ற கோள் வித்தியாசத்தில் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தை கிண்ணியா மத்திய கல்லூரி அணி தனதாக்கிக் கொண்டது.

சுற்றுப்போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்ட பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ஐ.ஏ. பரீட்  கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டப்ளியு.ஏ.ஹப்பாரினால் நினைவுச் சின்னம் வழங்கி கொளரவிக்கப்பட்டார், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கொளரவித்தார்.

இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.
பரிசளிப்பு நிகழ்வில் பறக்கத் டெக்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ஐ.ஏ. பரீட், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல். ரணவீர, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட அல்-மனார் மத்திய கல்லூரி அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.ஆர்.எல். ரணவீர வழங்கிவைத்தார். சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்ட கிண்ணியா மத்திய கல்லூரி அணிக்கான சம்பியன் கிண்ணத்தை பிரதம அதிதியாக கலந்துகொண்ட விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் வழங்கி வைத்தார்.
கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி.கேமானந்த, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜெலீல், மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், செயலாளர் ஏ.எம்.இப்றகீம், பொருளாளர் எம்.ஐ.எம்.அப்துல்மனாப், அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எம்.ஹிர்பஹான் உட்பட பலர் இதில் கலந்து கொண்டதுடன் அதிகளவான பார்வையாளர்களையும் மைதானத்தில் காணக்கூடியதாக இருந்தது










SHARE

Author: verified_user

0 Comments: