20 Apr 2016

கடந்தகால யுத்த வடுக்களை மறந்து எங்களுடைய மக்கள் ஆலயங்களுக்கு உலங்கு வானூர்தி மூலமாக பூத்தூவுகின்ற நடவடிக்கையாது, தற்போது நாகரிகமாக மாறிவருகின்றது கி.ம.உ. பிரசன்னா

SHARE
கடந்தகால யுத்த வடுக்களை மறந்து எங்களுடைய மக்கள் ஆலயங்களுக்கு உலங்கு வானூர்தி மூலமாக பூத்தூவுகின்ற நடவடிக்கையாது, தற்போது நாகரிகமாக மாறிவருகின்றது அச் செயற்படு நிறுத்தப்பட வேண்டிய தொன்றாகும் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா அவர்கள் தெரிவித்தார்
மட்டக்களப்பு போரதீவு லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த புத்தாண்டு விளையாட்டு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்

அதாவது எங்களுடைய மக்களை படுகொலை செய்த வானூர்திகளை வடகைக்கு அமர்த்தி அலயங்களுடைய கும்பாவிசேங்களின் போது கோபுரங்களுக்கு பூத் தூபுகின்றா நிகழ்வானது உண்மையில் வேதனைக்குரிய விடயம். கடந்தகாலங்களில் எங்களுடைய மக்கள் அந்த ஆலயங்களில் தஞ்சம் அடைந்தமைமையும் கருத்தில் எடுக்காமல் இந்த நாட்டின் பேரினவாத அரசுகள் இந்த வானூர்தியுடாகவே இந்த ஆலயங்களை அளித்தொளித்த வரலாறு இங்கு இருக்கின்றது. சமீபத்திலே நான் அறிந்தேன் இரண்டு ஆலயங்களுக்கு இவ் வானூர்தியூடாக இரண்டு மூன்று லட்சங்கள் செலவு செய்;து பூத்தூவியதாக அறிகின்றேன் இதனை நினைத்து வெட்கப்படவது மாத்திரமல்லாது வேதனைப்பட வேண்டியும் உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் எமது கல்வி நிலையினைப்பார்த்தால்; எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் வலயங்களைப் பொறுத்தளவில் மிகவும் பின்னோக்கித்தான்  சென்று கொண்டிருக்கின்றது இருக்கின்றன. இதனை உயர்த்த வேண்டிய பொறுப்பு எம் இனத்தினைச் சேர்ந்த அனைவருக்கும் உண்டு என்பதனை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இதில் தற்போதைய நிலையில் ஆலயங்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது. இவ்வாறானவற்றிக்கு செலவு செய்யும் பணத்தினை ஆலயங்கள் ஊடாக எமது மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசங்களின் கல்வி அபிவிருத்திக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்…
SHARE

Author: verified_user

0 Comments: