29 Apr 2016

மட்டு பட்டிருப்பு கல்வி வலய அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயற்பாடு.

SHARE

(பழுவூரான்)

மட்டு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயமானது 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு தொழிநுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் முதலாவது தடவையாக மாணவர்கள் க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இந்நிலையில் அம்மாணவர்களுக்கான் தொழிநுட்பவியலுக்கான விஞ்ஞானத்திற்கு இதுவரைக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையானது மிகவும் வேதனையான விடயம் என்பதனை மாணவர்களும், பெற்றோர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதேவேளை 02.02.2016 முதல் இன்று வரை தரம் 06 தொடக்கம் 11 வரையிலான மாணர்களுக்கு விஞ்ஞான பாட ஆசிரியர் இன்மையினால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். 2014 ஆம் ஆண்டு 35% ஆக இருந்த விஞ்ஞான பாட சித்தி வீதம் 2015 ஆம் ஆண்டு 65% ஆக உயர்வடைந்துள்ளது.

ஆகவே மாணர்களும் பெற்றோர்களும் மிகவிரைவான தீர்வென்றினை கேட்டு 24.02.2016 அன்று கடிதமொன்றினை பதில் வலயக் கலவிப் பணிப்பாளராக செயற்பட்டவரிடம் கையளிக்கப்பட்ட போதும் எதுவிதமான மாற்று நடவடிக்கையும் இடமபெறமையின் காரணமாக மீண்டும் அக்கடிதத்தின் பிரதியினை கடந்த 26.04.2016 ஆம் திகதி வலயக் கல்விப் பணிப்பாளர் ந.புள்ளநாயகத்திடம் ஒப்டைக்கப் பட்டுள்ளது. மிக விரைவான தீர்வினை பெற்றுத்தருவதாக அவர் கூறினார்.

நான்கு விஞ்ஞான பாட ஆசிரியர்கள் தேவையான இப்பாடசாலையில் இருந்த ஒரு விஞ்ஞான பாட ஆசிரியரையும் எந்த விதமான பதிலீட்டு ஆசிரியர்களும் இல்லாமல் இடமாற்றம் செய்யப் பட்டமையானது பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயற்பாட்டினை தெட்டத்தெளிவாக புடம் போட்டு காட்டுகினறது. என பெற்றோர் அங்கலாய்க்கின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: