27 Apr 2016

ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தினால் 50 குடும்பங்களுக்கு குடிசைக் கைத்தொழிலுக்கான உபகரங்கள் வழங்கி வைப்பு

SHARE
ஏறாவூர் அபிவிருத்திக்கும் வலுவூட்டலுக்குமான மனித சேவைகள் நிறுவனத்தினால்  (Serving Humanity through Empowerment and Development) வறிய மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் உழைப்பாளிகளைக் கொண்ட 50 குடும்பங்களுக்கு
குடிசைக் கைத்தொழிலுக்கான உபகரணங்கள் புதன்கிழமை (27.04.2016) வழங்கி வைக்கப்பட்டதாக அதன் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட இக்குடும்பங்களின் வேண்டுகோளுக்கிணங்க இடியப்ப உரல், தட்டு, சட்டி, பேசின் உட்பட தலா 4000 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இடியப்பம் தயாரிக்கத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் ஷெட் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ஷெட் நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித், பணிப்பாளர் சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியுமான ஏ.டபிள்யூ.எம் பவுஸ், நிருவாகக் குழுவைச் சேர்ந்த எம்.எல். பெரோஸ், ஏ.எம்.எம். நஸ{ர்தீன் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

வறிய குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கை கொடுக்கும் தமது தூரநோக்குத் திட்டத்தின் கீழ் இன்னும் பல வறிய குடும்களின் வாழ்வாதாரத்திற்கான திட்டங்களைத் தாம் அமுல்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக அப்துல் வாஜித் பயனாளிகளிடம் உரையாற்றும் போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: