14 Sept 2015

கட்டுரை : சிறுவர் பெண்கள், மீதான வன்முறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

SHARE
(வ.சக்திவேல்)
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 1967 நவம்பர் 7 ஆம் திகதி பெண்கெளுக்கெதிரான பாரபட்சத்தினை நீக்கும் பிரகடனத்தை மேற்கொண்டது. 

இப்பிரகடனம் ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் சகல உரிமைகளும், வழங்கப்பட வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விதந்துரைத்ததுடன் இதனை அமுல் செய்வதற்கான  உத்தரவாதத்தையும், கோரி நிற்கின்றது. 
சர்வதேச மகளிர் ஆண்டு 1795 இல் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்து இன்னமும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள்  பற்றிய விழிப்பூட்டலுக்காக 1976 தொடக்கம் 1985 வரையான காலப்பகுதி பெண்கள் தசாப்தமாகவும் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இவ்வாறு இருக்கத்தக்கதாக இலங்கைத் திருநாட்டின் நாலா பக்கமும் ஆங்காங்கே பெண்கள் மீதான வன்முறைகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும், பால் நிலை சமத்துவ மீறல்களும் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகின்றது.

கடந்த 10.09.2014 அன்று மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் குவைத் சிற்றி எனும் பகுதியில் 8 வயதான சிறுமி எஸ்.பாத்திமா சீமா என்பவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். 
இக்கோரச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தையே ஒருகணம் உலுக்கிப்போட்டு விட்டது.

பொலிஸாரின் தீவிர முயற்சியின் பயனாக இச்சம்பவத்திற்கு காரணமானவர் என சந்தோகிக்கப்படுபவரை பொலிஸாரால் கைது செய்யப்படார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், இக்கொலையைப் புரிந்ததாகக் கூறப்படும் நபருக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும், காத்தான்குடியில் கடந்த 12.09.2014 அன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் நடைபெற்றது.
   
இதேவேளை மட்டக்களப்பு நகரிலும், இச்சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் ஒன்றிணைந்து பல ஆர்ப்பாட்டப் பேரணியையும்,  நடாத்தியிருந்தனர்.

“பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறையினை ஒழிப்போம், காத்தான்குடி சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டிப்போம், படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்” போன்ற கருத்துக்களை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் முன்வைத்தனர்.

இவற்றினைவிட வட பகுதியில் புங்குடி தீவில் இடம்பெற்ற வித்தியாவின் சம்பவம். அதன் பின்னர் கிளிநொச்சி பகுதியில் நடைபெற்ற துஸ்ப்பிரயோகச் சம்பவம் என்பனவையெல்லாம், இலங்கையின் தற்போதைக காலகட்டத்தில் பெண்களின் நிலை நிலைதொடர்பான சம்பவங்களையே எடுத்துரைத்து நிற்கின்றன.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகள், தொடர்வதை இனிமேலும் தொடர் கதையாக அனுமதிக்க முடியாது. இவ்வாறான வன்முறைகள் பெண்கள் மத்தியில் ஆண்களாலேயே இடம்பெறுகின்றன.

சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்தல், பெண்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம், சேஷ்டைகள் இவற்றினை விட மனைவியை கணவன், துன்புறுத்துதல், அடிமையாக வைத்திருத்தல், போன்றவையும் பெண்கள் சொல்லும் கருத்துக்களை கவனத்திலெடுக்காமல் ஆண்கள் மாத்திரம் ஆதிக்கம் செலுத்துதல், ஆகிய விடயங்கள் வன்முறைகளுள் அடங்குகின்றன.

பெண்களுக்கும், சிறுவர்களுக்கும். எதிராக குற்றங்களை புரிவோர் நீதிமன்றம் மூலம் தண்டனைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்.

பெண்கள் மீதான வன்முறைகள் என்பது ஒரு மனித உரிமை மீறலும் மனித குல நெருக்கடியுமாகும். இந்த வன்முறைகள் நாட்டின் சமூக பொருளாதார கலை கலாசாரத்தற்கு பாரிய தடைகளாய் அமைகின்றன.

உலகளாவிய ரீதியில் நாளாந்தம், மூன்றுக்கு ஒரு பெண் ஏதோ ஒருவிதமான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றாள். 

இலங்கையில் நாளந்தம் சராசரியாக ஐந்து துஷ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் ஒரு கணக்கெடுப்பைக் வழங்கியிருந்தார். 

அதன்படி, 1750 சிறுவர் துஷ்;பிரயோகம், 330 பெண்கள் மீது துஷ்பிரயோகம், 5475 சிறுவர்களின் விருப்பத்திற்கு மாறான வன்புணர்வுகள், இது தவிர 1194 சிறுவர்  துஷ்பிரயோகங்களும், இடம் பெற்றதாக சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும் வெளிப்படையாக பொலிஸ் நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் பதியப்பட்ட சம்பவங்களை தொகுத்து வெளிவந்தவை.  

ஆனாலும், இவைகளைவிட இன்னும் எத்தனையோ சம்பவங்கள் வெளியே வராமல் பதியப்படாமல் இருக்கின்றன சம்பவங்கள் இந்த எண்ணிகையைவிட அதிகமாகவுள்ளது.

“கிராமங்கள் தோறும் வழிப்புணர்வுகள் நடாத்தப்படல் வேண்டும். இளைஞர்களுக்கும் இதில் பாரிய பொறுப்பு உள்ளது.


ஒட்டு மொத்தில் மனப்பாங்கில் பாரிய மாற்றம் வரவேண்டும். பாடசாலைகளிலுள்ள பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்;” என “பால் நிலை சமத்துவ செயற்பாட்டாளர் நளினி ரெட்ணராஜா தெரிவிக்கின்றார்”
  
இதேவேளை சமகால நிகழ்வுகள் குறித்தும் அதிலே பெண்கள் பற்றிய பொதுவான நிலைப்பாடு குறித்தும சமூக ஆர்வலர்கள் பல கருத்துக்களைத் தெரிவித்த்துள்ளனர்.

“பெண்கள் சக்தி என்பது ஒரு பாரிய சக்தியாகும் இதனைத் திறம்பட கட்டியெழுப்பினால்தான், சமூகத்தில் மாற்றங்களும், ஒழுக்கங்களும் மேலோங்கும்” 

எமது பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகங்கள், இளவயது திருமணங்கள், போன்ற பல பிரச்சனைகளை காணக்கூடியதாகவுள்ளது. 

எமது பெண்கள் உறுதியாக இருந்தால் இப்படிப்பட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். இவற்றுக்கு பெண்கள் சக்தியாக அணிதிரள வேண்டும்.

இவைகள் அனைத்தினையும் கவனத்திலெடுத்து எல்லாவற்றிற்கும் முதன்மையானவள் பெண்தான் என்பதனை எமது பெண்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.  

பாதிப்புக்களையிட்டு சோர்வடையக் கூடாது. துரிதமாகச் செயற்பட்டால் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றங்களும் அதன் பயனாக பாரிய அபிவிருத்திகளும் வந்து குவியும்.” ஏன சமூக ஆர்வலர்களும், பொது நலன் விரும்பிகளும் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்கள், பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்களால் சமூகத்தில் அச்சம் நிலவ வகுக்கக் கூடாது.

இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளைப் பராமரிப்பது, பாதுகாப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக மாறிவிட்டது. 

மேலும் வளர்ந்து வரும் நவநாகரீக மோகத்தினால் பல்வேறு தீய சக்திகள், குடும்பத்தின் புனிதத் தன்மையினை பாதிப்படையச் செய்கின்றன.

பெண்களின் கௌரவத்தை என்றும் நாம் பேண வேண்டும்.

பெண்களின் சாதனைகள் உலகத்திலே போற்றப்பட வேண்டியவைகளாகும்.

மானிடப் பிறவியில் ஆணும், பெண்ணும் சமம்தானே! இதனைப் புரிந்து கொண்டால் எந்தவொரு வன்முறையும் ஆண் பெண் என்ற பாகுபாட்டின் காரணமாக நிகழ வாய்ப்பில்லை.

SHARE

Author: verified_user

0 Comments: