1 Sept 2015

தவறுகள் இருப்பின் மூத்த உறுப்பினர்களுடன் பேசி தீர்க்க வேண்டும்

SHARE

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலவீனப்படுத்தும் முகமாக சிந்திக்கின்ற செயற்படுகின்ற அரசியல்வாதிகள் சிலர் இன்னும் எம் மத்தியில் உள்ளனர். அவர்களுக்கு தீனி வழங்குவது போன்று எமது கட்சிக்குள்ளே சில அரசியல் செயற்பாடுகளை யார் மேற்கொண்டாலும் அதனை நாங்கள் எதிர்க்கின்றோம் மறுதலிக்கின்றோம். 

அப்படியான செயற்பாடுகள் இனிமேலும் தொடரக் கூடாது எமது கட்சியினை வளர்ப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். 
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சனிக்கிழமை மாலை குமாரவேலியார், சேனையூர் மற்றும் ஏறாவூர்-5 ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களால் பாராளுமன்ற உறுப்பினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் இங்கு தெடர்ந்தும் உரையாற்றும் போது, 

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எமது கட்சியானது நன்கு சிந்தித்து சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்து மக்கள் முன் நிறுத்தியது. இதன்மூலம் மாவட்டத்தில் 127000 வாக்குகளை பெறக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. 

கடந்த முறை 66000 வாக்குகளை பெற்றிருந்தது. வேட்பாளர்கள் முறையாக தெரிவு செய்யப்பட்டு நிறுத்தப்படும் போது வாக்கு வங்கிகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். 

எனவே கட்சியானது சாணக்கியமாக செயல்பட்டுள்ளது. எமது கட்சியானது ஒரு ஜனநாயக கட்சி. கட்சிக்குள் ஏதாவது தவறுகள் தப்புக்கள் இருந்தால் அதனை கூறக் கூடிய இடம் உள்ளது. 

அவற்றினை திருத்துவதற்குரிய வழிவகைகளும் கட்சிக்குள் உள்ளது. அதற்காக கட்சியின் தலைமைகள் பொதுக் குழுக்கள் மத்திய குழுக்கள் என சில கட்டுக்கோப்புக்கள் உள்ளன. அதன் மூலம் தீர்வினை பெற்றுப் கொள்ளலாம். 

அதனை விடுத்து எடுத்த எடுப்பில் எமது அரசியல் பிரதிநிதிகள் வெளியில் கருத்துக்களை கொண்டுவருவதாவது கட்சியின் செயற்பாட்டிற்கு ஒரு நல்ல ஆரோக்கியமான செயல் அல்ல. 

சில அரசியல் பிரமுகர்கள் விமர்சனங்களை எடுத்த எடுப்பில் பத்திகையாளர் மாநாடுகளை கூட்டி செயற்படாமல் எந்த இடத்தில் கையாளுதல் என்ற விடயத்தினை என்பதை எங்கள் கட்சியில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் மூலமாக கதைத்து தீர்த்துக் கொள்வதே சிறந்ததாக இருக்கும், எனக் குறிப்பிட்டார். 
SHARE

Author: verified_user

0 Comments: