10 Aug 2015

தமிழ் மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் - யோகேஸ்வரன்.

SHARE

தமிழ் மக்களுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான். ஏனெனில் தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். எனவே அனைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணிதிரள வேண்டும்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு- களுமுந்தன்வெளியில் ஞாயிற்றுக் கிழமை (09) நடைபெற்ற தேத்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்காக வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் சுயேட்சையாகக் களமிறக்கப்பட்டு, மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்கான சதி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பைச் சேர்ந்த சில தமிழர்கள் பேரினவாதக் கட்சிகளிலும் இணைந்து கொண்டு தேர்தலில் குதித்துள்ளனர்.
இப்படிப்பட்டவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல. அற்ப, சொற்ப அபிலாசைகளுக்கும், பணத்திற்கும் பறிபோபவர்கள்தான் சுயேட்சையாகவும், பேரினவாதக் கட்சிகளின் பின்னாலும் செல்கின்றார்கள்.

தழிழ் மக்களின் வலியை உணர்ந்தவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னால்தான் அணிதிரள்வார்கள். இவ்வாறான விடையத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

பல பெறுமதியான சொத்துக்களையும், விலைமதிக்க முடியாத உயிரினங்களையும் மட்டக்களப்பிலிருந்து முள்ளிவாய்க்கால் வரைச் சென்று இழந்துவிட்டு நீதிக்காக அகிம்சை வழியில் தமிழினம் போராடிக் கொண்டிருக்கின்ற இந்நிலையில்.  தமிழ் மக்களைக் குழப்பி அதிலிருந்து குளிர் காய நினைக்கும் தீய சக்திகளின் பின்னால் எமது மக்கள் அணி திரளமாட்டார்கள். என்பதும் எமக்குத் தெரியும். 

எனவே மிகவிரைவில் தமிழ் தேசியகம் மிழிரவிருக்கின்ற இந்நிலையில் சர்வதேசத்தின் பால் ஈர்க்கப் பட்டிருக்கின்ற எமது தேசிய பிரச்சனைக்குத் தீர்வு காணும் தருவாயிலுள்ள இந்நிலையில் எமது மக்கள் அனைவரும் எதிர் வருகின்ற 17 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு நேரேயும், புள்ளடியிட்டு விரும்பி மூன்று வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களுக்கும், நேரேயும் புள்ளடியிட்டு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 4 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும், என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: