28 Jul 2015

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பாத யாத்திரைக்கு அழைப்பு.

SHARE

கிழக்கில் சின்னக் கத்திர்காமம் என அழைக்கப்படும் ஸ்ரீ தாந்தாமலை முருகன் அலயத்திற்கு 4 வது முறையாக பாத யாத்திரையாகச் செல்வதற்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இதன் எற்பாட்டாளர் ஏ.ராயூ தெரிவித்தார்.

புதன் கிழமை (29) அதிகாலை 5 மணியளவில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து யாத்திரை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதில் இணைந்து கொள்ளும் பக்கதர்கள் அனைவரும் உரிய நேரத்திற்கு வந்து சேருமாறும் மேலதிக விபரங்கள் தேவைப் படுபவர்கள், 0779898006, 0770846712 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதன் கிழமை அதிகாலை 5 மணிக்கு புறப்படும் யாத்திரிகர் குழு, ஓந்தாச்சிமடம், எருவில், களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, பெரியபோரதீவு, புன்னக்குளம், தும்பங்கேணி, திக்கோடை, வாழைக்காலை ஆகிய பிரதேசங்களுடாகச் சென்று புதன் கிழமை இரவு வாழைக்காலைப் பிள்ளையார் ஆலயத்தில் தரித்து நின்று மறுநாள் வியாழக்கிழை ஸ்ரீ தாந்தாமலை ஆலயத்தைச் சென்றடையவுள்ளனர்.

ஸ்ரீ தாந்தாமலை ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த  11.07.2015 அன்று கொடியேற்றத்துமடன் ஆரம்பமாகி எதிர் வரும் 01.08.2015 அன்று காலை நடைபெறும் தீத்தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

SHARE

Author: verified_user

0 Comments: