14 Oct 2026

EL NINO காலநிலை பாதிப்புக்கு முன்னர் முன்னெடுக்கப்படும் பாரிய வீதி அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முடிவுறுத்த நடவடிக்கை.

SHARE

EL NINO காலநிலை பாதிப்புக்கு முன்னர் முன்னெடுக்கப்படும் பாரிய வீதி அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முடிவுறுத்த நடவடிக்கை.

போக்குவரத்து நெடுஞ்சாலை நகர அபிவிருத்தி அமைச்சினால்  EL NINO காலநிலை பாதிப்புக்கு முன்னர்  மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் பாரிய வீதி அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக முடிவுறுத்த நடவடிக்கை தொடர்பான் கலந்துரையாடல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு  தலைமையில் மாவட்ட அரசாங்க  அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை(14.10.2026) நடைபெற்றது. 

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எச்.கே.டி.பி. ரத்நாயக்கவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன. 

இதன்போது டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம், மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மற்றும் பயணிகள் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டன. 

இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள்,  திணைக்களத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: