மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் திங்கட்கிழமையிலிருந்து கடந்த மூன்று தினங்களான பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் மீண்டும் தாழ்நிலங்களை மழைநீர சூழ்ந்துள்ளது. இதனைவிட கிராமங்களின் உள்வீதிகளிலும் மழைநீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை மட்டக்களப்பு கிரான் பாலத்தினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை(18.02.2026) காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு நகரில் 128.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 104.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 111 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 52 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமமம் பகுதியில் 63.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 70 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 80 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரி பகுதியில் 39.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை உன்னிச்னைக் குளத்தின் நீர்மட்டம் 31 அடி 3 அங்குலமாக உயர்ந்துள்ளதாக அக்குளத்திற்கும் பொறுப்பான நீர்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment