மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் பாரிய விபத்து – வீதியில் பாய்ந்து தெய்வாதீனமாக உயிர் பிழைத்த சாரதி.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் இன்று சனிக்கிழமை (28.02.2026) பாரிய விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான இரு வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.
மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தின் மூலம் அதே பிரதேச சபையில் பழுதடைந்திருந்த டிப்பர் வாகனத்தை கட்டி இழுத்துச் சென்றபோது இரு வாகனங்களையும் கம்பி ஒன்றை வைத்து இணைத்துக் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் முன்னால் கட்டி இழுத்துச் சென்ற உழவு இயந்திரத்தின் மீது டிப்பர் வாகனம் ஏறியுள்ளது.
இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி வீதியில் பாய்ந்து தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார். இவ்விபத்துச் சம்பவத்தால் இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
இவ்விபத்துச் சம்பவத்தால் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் சிறிது நேரம் வீதித் தடை ஏற்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், வீதித் தடைகளை உடன் நீக்கி, போக்குவரத்திற்கு சழிசமைத்துக் கொடுத்திருந்ததுடன், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.





0 Comments:
Post a Comment