மட்டக்களப்பில் இந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்கும் தெய்வீக அனுபவமும் தெய்வீக இசை நிகழ்சியும்.
மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் பங்கேற்கும் “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சி பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் அமைந்துள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை(08.06.2026) நடைபெற்றது.
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான இணைப்பாளர் வி.கே.சுரேந்திரன் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
தன்போது கருத்துத் தெரிவித்த அவர் மகா சிவராத்திரியைச் சிறப்பிக்கும் முகமாக எதிர்வரும் 17 ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் மாபெரும் தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும் எனும் நிகழ்சி இடம்பெறவுள்ளது. அதில் பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனும் அவரது மகள் உத்தரா உன்னிகிருஷ்ணன் ஆகிய இருவரும் பங்கேற்கவுள்ளனர். “தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” எனும் இசை நிகழ்ச்சிக்கு ஆன்மீக பேச்சாளராக இந்தியா – திருவண்ணாமலையில் இருந்து தெய்வீக சகோதரி உமா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
இதனோடு இணைந்தாக எதிர்வரும் 14, 15 மற்றும் 16 திகதிகளில் கல்லடி கடற்கரையில் 12 ஜோதிலிங்க தரிசன கண்காட்சி இடம் பெற்று அதனைத் தொடர்ந்து 17 ஆம் திகதி பி.ப 6.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணி வரைக்கும் இந்திய பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணனும் அவரது மகளும் பங்கேற்கவுள்ளனர்.
பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதான தலைமையகம் இராஜஸ்தானிலும், உலகம் முழுவதும் 5000 கிளைகளைக் கொண்டுள்ளதுடன் 147 நாடுகளில் அதன் கிளைகள் வியாபித்துள்ளதுடன், இலங்கையில் அதிகமான மாவட்டங்களில் கிளைகள் நிறுவப்பட்டு தெய்வீக செயற்பாடுகள் மற்றும் சமூக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், 25 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையம் தமது சேவையினை மேற்கொண்டு என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment