11 Aug 2025

மூகோவின் மணிவிழா புத்தக வெளியீடு.

SHARE

மணிவிழா புத்தக வெளியீடு.

இலங்கை நிருவாக சேவை விசேடதரத்திலுள்ள அமைச்சின் முன்னாள் செலாளர் மூத்ததம்பி கோபபலரெத்தினம் அவர்களின் மணிவிழா புத்தக வெளியீடு ஞாயிற்றுக்கிழமை(10.08.2025) மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. 

ஓய்வுநிலை சிரேஸ்ட இலங்கை நிருவாக சேவையாளர் கலாநிதி சி.அமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பி.தயாநந்தன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.ஜே.அதிசயராஜ்,  புணர்வாழ்வு அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன்,  மற்றும் அரச உயர் அதிகாரிகள், இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள், ஓய்வு நிலைய அதிகாரிகள், கவ்வியலாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், என பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது மூகோவின் 40 வருட அரச சேவையின் தடங்கல், மற்றும் இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியல் நிலமைகளின் சமகாலப் போக்குகள் எனும் இரு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டன. 

மணிவிழா சிறப்பு மலர்களுக்கான ஆய்வுரைகளை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் வேலுப்பிள்ளை குணரெத்தினம், அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் க.அனிரன் அவர்களும் நிகழ்த்தினர். 

இலங்கை நிருவாக சேவை விசேடதரத்திலுள்ள அமைச்சின் முன்னாள் செலாளர் மூத்ததம்பி கோபபலரெத்தினம் அர்களின் சேவையைப் பாராட்டி இதன்போது பொன்னாடை போர்;த்தியும், வாழ்த்து மடல் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

















SHARE

Author: verified_user

0 Comments: