மண்முனை மேற்கு பிரதேச சமுர்த்தி அமைப்பின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம்.
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்தியர்களால் பன்சேனை கிராமத்தில் நடாத்தப்பட்டது.
இதன் போது பாடசாலை மாணவர்களுக்கு பல் விஷேட சிகிச்சையும் இடம் பெற்றது.
காஞ்சிரங்குடா, பனையறுப்பான், பன்சேனை, சில்லிக்கொடியாறு உள்ளிட்ட கிராம சில கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வருகை தந்து சிகிச்சையினை பெற்றனர். இதில் குறிப்பாக அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் பின்னர் நோய்வாய்பட்ட பொது மக்களுக்கும் அதிகமாக வருகை தந்திருந்தனர்.
இதில் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கு பல் சுகாதாரம் தொடர்பான விழிப்பூட்டல் பல் வைத்தியர்களால் ஏற்படுத்தப்பட்டது.
பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் பங்களிப்புடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையின் வைத்தியர்கள் இவ் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சையளித்தனர்.
0 Comments:
Post a Comment