தக்காளிச்சாறு நிறுவன உற்பத்தியாளருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும்.
தக்காளிபழ சாறு கலவையில் உணவு பாதுகாப்பு விதிகளை மீறி மனித சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் பென்சோயிக்கமிலம்,
செயற்கை நிறமூட்டி கொண்டு தயாரிக்கபட்ட கலவையை பாவித்த சிற்றுண்டிச் சாலை உரிமையாளர், விநியோகித்தர், மற்றும் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஆகியோருக்கு எதிராக சுகாதார பரிசோதகரால் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரனால் தொடுக்கபட்ட வழக்கில் தக்காளி சாறு கலவை நிறுவன உரிமையாளருக்கு ரூபாய் 36000 தண்டபணமும் அத்துடன் 6 மாத கால சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கபட்டதுமாக தண்டனையை நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளதாக வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment