சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருது பெற்றார் ஊடகவியலாளர் சைலஜா.
இதன்போது அவர் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மலையத்தின் ஊவா ஐலண்ஸ் தமிழ் தேசிய பாடசாலையில் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற அவர் ஆரம்பத்தில் மலையத்திலிருந்து இயங்கிய முழக்கம் எப்.எம், பின்னர் ஊவா சமூக வானொலியிலும் அறிவிப்பாளராக கடமையாற்றியுள்ளார். பின்னர் இன்றநியூஸ் எனும் சர்வதேச ஊடக அமைப்பினூடாக பல பயிற்சிகளைப் பெற்று தற்போது உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களுக்கு ஆக்கங்களை எடுத்தியம்பி வருவதோடு, இணையத்தளங்கள், மற்றும் யூரீயூப் ஊடகாக செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்து வருகின்றார்.
இவ்வாறான திறமை மிக்க பெண்கள் ஊடகத்துறையில் மிளிர்வதை பிறைநிலா ஊடக வலையமைப்பு போன்ற அமைப்புக்கள் பாராட்டி விருது வழங்கி கௌரவிப்பதானது ஊடகத்துறையில் கால்பதிக்க நினைக்கும் பெண்களுக்கும் ஓர் உந்துதலாக அமையும் எனலாம்.
0 Comments:
Post a Comment