15 Jan 2024

பகவத்தீதை சுகோகங்கள் கூறுதல் தேசிய மட்டப் போட்டியில் முதலிடங்களைப் பெற்ற மட்டக்களப்பு மாணவர்கள்.

SHARE

பகவத்தீதை சுகோகங்கள் கூறுதல் தேசிய மட்டப் போட்டியில் முதலிடங்களைப் பெற்ற மட்டக்களப்பு மாணவர்கள்.

இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தினால் தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட பகவத்தீதை சுகோகங்கள் கூறுதல், பகவத்கீதையை விளங்கிக் கொள்தல், போன்ற தலைப்புக்களில் நடாத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு முதலிடங்களும், ஒரு இரண்டாம் இடமும் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டம் கற்சேனைக் கிராமத்தைச் சேரந்த கண்ணன் திவானுஜன், மற்றும் ஆரையம்பதியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா கதிஸ்பிரணாத் ஆகிய இருமாணவர்களும் இருபோட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்இவர்களுக்கு தலா ஐம்பதினாயிரம் பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதுபோல் மற்றுமொரு போட்டியில் கலந்து கொண்ட கற்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த விதுசன் சதுசனா இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதோடுஅவருக்கு முப்பத்தினாயிரம் ரூபா பணப்பரிசும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்குரிய பரிசுகள் அண்மையில் இந்திய தூதுவரால் கொழும்பில் அமைந்துள்ள இந்திய கலாசார நிலையத்தில வைத்து வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: