களுதாவளையில் நடைபெற்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளைக் கிராமத்தில் அமைந்துள் இந்து மாமன்றம் அக்கிராமத்தில் இயங்கும் எட்டு அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையே ஏற்பாடு செய்திருந்த போட்டி நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(16.11.2023) களுதாவளை இராமகிருஷ்ண வித்தியாலயத்தியாலயத்தில் இடம்பெற்றது.
களுதாவளைக் கிராமத்தில் எட்டு அறநெறிப் பாடசாலையில் சுமார் 500 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த எட்டு அறநெறிப் பாடசாலைகளையும் களுதாவளை இந்துமா மன்றம் முன்னின்று செயற்படுத்தி வருகின்றது.
இவ்வாறு செயற்படும் அறநெறிப்பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் இணைப் பாடவிதான செயற்பாடுகளை ஊக்கப்டுத்தும் முகமாக இந்துமா மன்றத்தின் தலைவர் ப.குணசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோலம்போடுதல், பண்ணிணை, வில்லுப்பாட்டு, பஞ்சபுராணம் ஓதுதல், உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக களுதாவளை இந்துமா மன்றத்தின் செயலாளர் ஞானசேகரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment