பாரம்பரிய உணவுகளின் செய்யுமறையும் கண்காட்சியும்.
விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய உணவுகளின் செய்யுமுறையும் கண்காட்சியும் பழுகாமத்தில் அமைந்துள்ள இந்து காலாசார நிலையத்தில் வெள்ளிக்கிழமை(27.10.20323) இடம்பெற்றுள்ளது.
இனிவரும் காலங்களில் போசனை நிறைந்த உள்ளுர் உணவுகள் புழக்கத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவும், இளம் சமுதாயத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் பாரம்பரிய உணவுகள் பற்றிய மக்களிடத்தில் அழிந்து செல்லாமலும், தொழில் முயற்சிகளுக்கு வழிகாட்டும் நோக்கிலும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குரக்கன், கௌபி, உழுந்து சிவப்பரிசி, மற்றும் சிறுதானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட உணவுகள் இதன்போது தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தக்கட்டன.
பழுகாமம் விவசாயப் போனாசிரியர் துசாந்தினி ஜதீசனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசா, உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், சுகாதாரப் பரிசோதகர், பாடவிதான உத்தியோகஸ்த்தர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment