உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் முதியோர் தினத்தில் உதவி வேண்டி நிற்கும் ஒரு விதவைப் பெண்ணின் அவல நிலை.
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவர்களை கௌரவிக்கும் சமூக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்த அனர்த்தங்களினாலும் இயற்கை பாதிப்புக்களினாலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இன்றும் பல விதவைப் பெண்கள் தங்களது பிள்ளைகளின் கல்விக்காக பல தியாகங்களுக்கு மத்தியிலும் தற்போது உயிர் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து வாழும் முதியவர்களும் தற்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் இவ்வாறான நிகழ்வுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை இராசதுரைநகர் கிராமத்தில் அமரசிங்கம் அமராவதி 60 வயதான விதவைப்பெண். தனது பேரப் பிள்ளைகளின் கல்விக்காக கிராமத்தில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். காலை உணவாக அப்பம் மற்றும் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தானும் உயிர் வாழ்ந்து கொண்டு தன்னை நம்பியுள்ள பேர குழந்தைகளும் கல்விக்காகவும் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த காலங்களில் பல தடவை இவரது பெட்டிக்கடைக்கு கட்டு யானைகள் பல தடவை சேதப்படுத்தியதுடன் இவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இருப்பினும் இவருக்கு இதுவரை எதுவீத நஷ்ட ஈடுகளும் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனையான விடயமாகும். உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட கடனுதவி மூலம் மீண்டும் மீண்டும் இந்த கடையை கட்டி தற்போதும் இந்த உணவகத்தை நடத்தி வருகின்றார் அந்தப்பெண். ஆப்பகுதியில் காட்டு யானைகளில் அச்சம் காரணமாக தமது அன்றாட வாழ்வாதார ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தன்னை நம்பியிருக்கும் சிறார்கள் கல்விக்காக இவர் மனிதாபிமான உதவிகளை வேண்டி நிற்பதாகத் தெரிவிக்கின்றார்.
சர்வதேச முதியோர் தினத்தை உலகமே நினைவு கூருகின்ற இந்நாளில் தமக்கு சேதம் அடைந்த இந்த உணவகத்தை திருத்தி தந்து கடனுதவிகாயினும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் நமது குடும்பத்தையும் தன்னை நம்பி இருக்கும் இந்த சிறுவர்களின் கல்விக்காகவும் உதவ முடியும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார். மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் தொடரற்சியாக காட்டு யானைகளின் தாக்கத்தினால் வீடு சேதம் அடைந்துள்ளதுடன் அங்குள்ள மக்கள் மிகவும் உயிர் ஆபத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தமது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சர்வதேச முதியோர் தினத்திலாவது மனிதாபிமான, உதவியை வேண்டி நிற்பதாக அங்கலாய்க்கின்றார்.
இந்த விதவை பெண்மணி இக்காலங்களில் ஏற்படும் வரட்சி மற்றும் அடைமழை வெள்ள காலங்களில் தாம் பெரிதும் வாழ்வாதார உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் இவர்களின் கல்வி செயற்பாட்டிற்காக தமக்கு உதவி கூறி நிற்கின்றார். இந்த முதியவர் தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் விலைவாசிகள் அதிகமாக உள்ளதால் நமது வாழ்க்கையை நடத்துவதில் பெரும் சிரமப்படுவதாகவும், பகுதியில் குடிநீர் பிரச்சனை காட்டுயானை தாக்கம் போன்றவற்றினால்தான் அதிகம் சிரமப்படுவதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்குரிய நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு அப்பெண் வேண்டி நிற்கின்றார்.
0 Comments:
Post a Comment