ஆசிரியர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றார்கள் - வலயக் கல்விப் பணிப்பாளர்.
ட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் அதிபர்களும். ஆசிரியர்களும், பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்டிருந்த கொரோனா, மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எந்த சந்தர்ப்பத்திலும் மாணவர்கள் கல்வியை இழந்திடக்கூடாது என்பதற்காக எமது வலயத்தின் கீழுள்ள அதிபர்களும், ஆசிரியர்களும், மிகவும் அற்பணிப்புடன் இணையவழியூடாகவும், வேறு பல நுட்பங்கள் மூலமாகவும், மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றார்கள். என மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் தெரவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து கடந்த 5 வருடங்களாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பரிசழிப்பு விழா களுதாவளை மகாவித்தியாலயம்(தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(28.04.2023) காலை நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
பட்டிருப்பு கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறைக்குப் பெயர்போன கல்வி வலயமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. விளையாட்டு மாத்திரமல்லாமல், தமிழ் மொழித் தினப்போட்டி, ஆங்கில மொழி தினப்போட்டி, உள்ளிட்ட இணை பாடவிதான செயற்பாடுகளிலும், இவ்வலயம் மேலோங்கி நிற்கின்றது.
இவ்வலயத்திலுள்ள 70 பாடசாலைகளிலம் கற்கின்ற மாணவர்கள் வெவ்வேறு விதமான ஆற்றல்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனார்கள். இவ்வாறான மாணவர்களின் திறமைகளை நாம் அடையாளம் கண்டு அவர்களை வழிப்படுத்துகின்றபோது அவர்கள் இச்சமுதாயத்தில் எதிர்காலத்தில் பல பதவிகளில் அவர்கள் அலங்கரிக்கப் போகின்ற பிரதிநிதிகள் தான் இவர்கள்.
இந்த தேசத்திற்குத் தேவையான சிற்பிகள் இங்கிருந்துதான் கட்டியெழுப்பப் படுகின்றார்கள். இக்கல்வி வலயத்தில் மிக மிக திறமைவாய்ந்த அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும். திகழ்கின்றார்கள். இவ்வாறான அதிபர், ஆசிரியர்களைக் கொண்டு இன்னும் பல சாதனையாளர்களை இவ்வலயத்தில் எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment