மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர்தினம் புதன்கிழமை(08.03.2023) வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வன்னிஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், திருமதி.ரேணுகா சிவஞானசுந்தரம், நல்லையா கல்வி நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் பாலச்சந்திரன் நல்லையா, வன்னி ஹோப் நிறுவனத்தின் செயலாளர் வைத்தியர் மாலதி வரன் மற்றும் வன்னி ஹோப் நிறுவன ஸ்தாபக உறுப்பினர் கந்தக்குமார், போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், வன்னிஹோப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பானர் எஸ்.ரேகா, மற்றும் பிரதேச மகளிர் சங்கங்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்காக நிதி உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டதோடு, அப்பகுதி பெண்களால் அவ்விடத்திலேயே உணவுகளும் செய்விக்கப்பட்டு உணவுக் கண்காட்சியும் இதன்போது இடம்பெற்றதோடு, தெரிவு செய்யப்பட்ட மகளிரும்,
சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களும், இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment