இலவச கண் பரிசோதனையும் மூக்கு கண்ணாடி வழங்கல் நிகழ்வும்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசசபையின் சமூக அபிவிருத்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச கண் பரிசோதனையும் மூக்கு கண்ணாடி வழங்கல் நிகழ்வும் வியாழக்கிழமை (09.02.2023) பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதேசசபையின் தவிசாளர் கனகரெட்னம் கமலநேசனின் தலைமையில் சபையின் செயலாளர் சன்முகம் நவநீதன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அப்துல்லா ஹாரூன் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் மட்டக்களப்பு லிலோ கழகத்தின் அனுசரனையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் 500 இற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம், மற்றும் சிங்கள் மக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பரிசோதனை முகாமில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு இலவசமாக மூக்குகண்ணாடி வழங்கியதுடன் கண்ணில் வெண்படலம் நோய் கண்டறியப்பட்ட 22 பேருக்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினூடாக சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் பிராந்திய தலைவர் கே.லோகேந்திரன் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக சிரேஷ்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுரேஷ் றொபட், லியோ கழகத்தின் தலைவர் பிரஷாந்தன் மற்றும் அதன் உறுப்பினர்கள், பிரதேசசபை உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலரும் இதன்ணபோது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment